சமூக ஊடகங்களிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

சமூக ஊடகங்களிலிருந்து...

இன்னுமா பார்ப்பனீயம் பார்ப்பனீயம்னு உருட்டுறீங்ன்னு கேட்கும் கனதனவான்களே ! நண்பர்களே !

ரங்கராஜ் பாண்டே பார்ப்பன மாநாட்டில் ஆணவத்தோடு பேசியது காதில் விழுந்ததா ?

குருமூர்த்தி, எச்.ராஜா, சு.சாமி வகையறாக்கள்  பேசுவது காதில் விழுகிறதா ?

சமூக வலைதளங்கள் பெருமளவு செயல்படும் இன்றைக்கே இவ்வளவு திமிரும் வன்மமும் காட்டும் இவர்கள்; தந்தை பெரியார் பணி துவக்கிய காலத்தில் எப்படி வெறியாட்டம் போட்டிருப் பார்கள் ?

அந்தக் கிழவனின் துணிவும் உறுதியும் விடாப்பிடியான போராட்டமும் - யோசித்தாலே மலைப்பாக இருக்கிறது.

"மோடி ஆட்சிக்காலமே நம் பொற்காலம்" என பாண்டே, குருமூர்த்தி கூட்டம் கூச்சலிடு வதை உணர்ந்து கொள் தமிழா !

வைதீக எதிர்ப்பு மரபு தமிழ்நாட்டில் இரண் டாயிரம் ஆண்டு பழைமையானது.அதனை மக்கள் இயக்கமாக மாற்றியவர் தந்தை பெரியார் பெரியார். அந்தப் பணியை இன்றைய தேவைக்கு ஒப்ப கூர்மைப் படுத்த வேண்டியதின் அவசர அவசியத்தை பாண்டேக்கள் நினைவூட்டி இருக்கிறார்கள்!

- சு.பொ. அகத்தியலிங்கம்

‘தீக்கதிர்' ஏட்டின் மேனாள் பொறுப்பாசிரியர்


No comments:

Post a Comment