மாதவிலக்கு விடுப்பிற்கு அனுமதி: கொச்சி பல்கலைக்கழகம் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

மாதவிலக்கு விடுப்பிற்கு அனுமதி: கொச்சி பல்கலைக்கழகம் முடிவு

 கொச்சி ஜன. 19- மாணவர் அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதவிலக்கு நாட்களில் விடுமுறைவேண்டும் என்பதை பரிசீலனை செய்து விடுமுறை கொடுக்க கொச்சி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது

கேரள மாநிலம் கொச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மாணவர் சங்கக் கூட்டமைப்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தின. இந்நிலையில் மாணவர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மாதவிலக்கு நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை வழங்க கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment