உலகில் “பார்ப்பனர்களை தவிர சிறந்த பகுத்தறிவுவாதிகள்” எவரும் இருக்க முடியாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

உலகில் “பார்ப்பனர்களை தவிர சிறந்த பகுத்தறிவுவாதிகள்” எவரும் இருக்க முடியாது

1. பார்ப்பனர்கள் மொட்டை போட்டுக் கொள்வதில்லை

2.  கடவுளின் பெயரால் அலகு குத்திக் கொள்வதில்லை.

3. தீ மிதிப்பதில்லை.

4. காவடி தூக்குவதில்லை.

5. ஜாதி சண்டைகளுக்கு போவதில்லை. 

6. சொந்தக் காசில் பாலபிஷேகமோ, பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை.

7. விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலைப் படுவதில்லை.

8. தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு நேர்த்தி கடன்களை செய்வதில்லை.

9. எந்த பிராமணன் வீட்டு பெண்களும் சாமியாடிப் பார்த்ததில்லை!

10. நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக! அவர்களை பொறுத்தவரை ‘கடவுள்’ என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்க பயன்படும் உலோகத்தால் ஆன ஒரு கருவி மட்டுமே.

29 மாநில சட்டசபைகளில் 9இல் மட்டுமே பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

மறுபுறம் சிக்கிமில் 0 இடங்கள், மிசோராமில் 0 இடங்கள். தமிழ்நாட்டில் 4 இடங்கள்.

அவர்களுக்கு இருக்கைகள் உள்ளன.

ஆந்திராவில் 175க்கு 4

கேரளாவில் 140க்கு 1

பஞ்சாபில் 117இல் 3

வங்காளத்தில் 294இல் 3

தெலங்கானாவில் 119இல் 2

டில்லியில் 70க்கு 8 பேர்

நாகாலாந்தில் 60க்கு 12

பீகாரில் 243க்கு 74

பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உள்ள மாநிலங்களில், பா.ஜ.கவின் இருக்கை நிலை. மேகாலயாவில் 60க்கு 2 பேர்.

ஜம்மு காஷ்மீரில் 87இல் 25

கோவாவில் உள்ள 40 இடங்களில் 13 இடங்கள்.

நாட்டில் மொத்தமுள்ள 4139 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 1516 இடங்களைக் கொண்டுள்ளது. அதில் 950 இடங்கள் குஜராத், மகாராட்டிரா, கருநாடகா, உ.பி., ம.பி. ராஜஸ்தான் போன்ற 6 மாநிலங்களிலிருந்து வந்தவை.

அர்த்தம் தெளிவாக உள்ளது. நாட்டில் பா.ஜ.க.வின் அலையோ புயலோ இல்லை. உண்மையில், நாட்டின் 70% இடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது.

பிஜேபியின் இந்த உண்மை நிலையை எந்த ஒரு பெரிய தொலைக்காட்சி அலைவரிசையோ அல்லது எந்த ஊடகங்களுமோ சொல்லாது. மக்கள் உண்மையை அறிய வேண்டும். ஏனெனில், நாட்டில் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

(நன்றி: ‘முள்ளும் மலரும்‘ டிசம்பர் இதழ், 2022, பக்கம் 114)

No comments:

Post a Comment