சினிமா இரசிகர் மன்றமும் - சீரழிவும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

சினிமா இரசிகர் மன்றமும் - சீரழிவும்

 13.1.2023 அன்றைய 'விடுதலை' நாளிதழில் மயிலாடன் எழுதிய ரசிகர் மன்றம் ஒற்றைப் பத்தி சிறப்பு. சினிமா வெறி, சூதாட்ட வெறி, மது வெறி இந்த நாட்டை அழிக்கின்ற நிலை. அதோடு   மாணவர், இளை ஞர்கள் நடவடிக்கை களை ஜீரணிக்க முடியவில்லை. நான் பள்ளி தோறும் புத்தகக் கண்காட்சிபற்றி விளக்கி காலையில் தொடர்ச்சியாக பாடல் களைப் பாடி என் வயது அனுப வத்தை பேசு கின்றவன். அன்றைய விடுதலையை வரி விடாமல் படிப் பவன்.

தமிழ்நாடா? தமிழகமா என்ற குழப்பம், ராமர் பாலமா? சேது பாலமா? என்ற மோதல். மக்களை நல்ல வழியில் சிந்திக்க விடாமல் ஏதோ குழப்பம் விளைவிக்கும் நிலை. பள்ளிகள் அறிவியலை போதிப்பதை விட ஆன்மிகத்தை கையில் எடுத்துவிட்டது. எல்லாம் அவன் செயல் என்பது இயலாமை.

“போராட கற்றுத் தந்தவர் யார் இங்கே

பூபாளம் பாடி நின்றவர் யார் இங்கே

அடிமைக்கு உரிமை தந்தவர்

முனி மன்னவர் இல்லை என்றவர்

பிறப்பாலே உயர்ந்தவன் தாழ்ந்தவன்

பூமியில் இல்லை இல்லை என்று’’

தோழர் பரிணாமன் கவிதை வரிகள்.

தமிழ்நாடு என்ற பெயர் வைக்க போராடிய தியாகி சங்கரலிங்கனாரை  மறந்த நாடு, எவ்வளவு தியாகிகளை நாடும் மக்களும் மறந்துவிட்ட நிலை.

இயக்கத்தவர்களை  இயக்கத் தொண்டர்களை மறந்த நிலை. மக்களை குறை சொல்ல முடியாது. செய்தித் தாளில் ஒரு குடும்பத்தில் உதவாதவனாக பெரும்பாலும் வாழ்ந்த வனுக்கு மரியாதை. மக்கள் சரியாக இருந் தால் மன்னன் சரியாக இருப்பான். மன்னன் சரியாக இருந்தால் மக்கள் சரியாக இருப்பர்.

'விட்னஸ்' திரைப்படத்தை பாராட் டியுள்ளீர்கள். மனிதக் கழிவை மனிதன் சுமக்கும் அவல நிலைக்கு மாற்றம் தேவை.  

மனிதன் வாழ்க்கையில் நல்லதை செய்து நல்ல பெயர் வாங்க வேண் டும். தற்கால சினிமாவின் அத்த னையையும் சீரழிக்கும் போக்கு, ரசிகர் மன்றம், கதாநாயகன் அரசி யலில் கொடிகட்டிப் பறக்க நினைத்து  சாதாரண சினிமா இரசிகன் மூளைச் சலவை செய்யப்பட்டு வாழும் காலம். அவர்கள் பெரும்பாலும் ஒழுக்கம் நிறைந்தவர்களும் இல்லை. விதிவிலக்குகள் இருக்கலாம்.

 - இரா.சண்முகவேல்,

 கீழக்கலங்கல் 

No comments:

Post a Comment