’கற்போம் பெரியாரியம்’ பயிற்சி வகுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

’கற்போம் பெரியாரியம்’ பயிற்சி வகுப்பு

 லால்குடி, ஜன.5, லால்குடி பெரியார் மாளிகையில் கற்போம் பெரியாரியம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருச்சி மண்டலத் தலைவர் ப. ஆல்பர்ட், லால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர் முன்னிலையில், “கற்போம் பெரியாரியம்” பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 

லால்குடி பெரியார் மாளிகையில் கடந்த 26-12-2022 அன்று ஒன்றிய இளைஞரணித் தலைவர் அ. ஸ்டான்லி தலைமையில் “கற்போம் பெரியாரியம்” பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பிரவீன், அரிபிரசாத், விவேக், யுவராஜ், மணிகண்டன், மாணிக்கம், சூர்யா, விஜய் மூர்த்தி, வைர காவியன், வீர விக்னேஸ்வரன், ரவிச்சந்திரன், கார்த்திக் ஆகிய 12 புதிய மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இவர்களுக்கு ”திராவிடம்” எனும் தலைப்பில் ஒன்றிய இளைஞரணித் தலைவர் ஸ்டான்லி, “நீதிக்கட்சி” எனும் தலைப்பில் சுரேஷ், “மனுதர்மம்” எனும் தலைப்பில் சங்கர் ஆகியோர் பாடம் நடத்தினர். ”யார் பெரியார்?” எனும் தலைப்பில் திருச்சி மண்டலத் தலைவர் ப.ஆல்பர்ட் வகுப்பெடுத்தார். ஒவ்வொரு வகுப்பிற்கு பின்னர் மாணவர்களின் அய்யங்களுக்கும் பதில்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment