ஆளுநருக்கு தலைவர்கள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

ஆளுநருக்கு தலைவர்கள் கண்டனம்

ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர்

கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை,ஜன.10- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

2023ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (9.1.2023) தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத் திலும் சட்டப் பேரவை கூடும் போது ஆளுநர் உரையுடன் அவையை தொடங்குவதுதான் நடைமுறையில் உள்ள வழக்கம்.

அப்படித்தான் இன்றும் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையை வாசிக்கும்போது பல இடங்களில் உரையில் இடம் பெற்றிருந்த வார்தைகளை தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக அவர் விருப்பம்போல் வார்த்தைகளை சேர்த்து படித் தார். இது அரசமைப்பு சட்ட வரம்புகளை மீறிய செயலாகும்.  

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி அவர்கள் நியமிக் கப்பட்டது முதல், அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுகிற வகை யில் அவர் செயல்பட்டு வரு கிறார். இதுகுறித்து, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத் துக் கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்பியும் அதை அலட்சியப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறி வருகிறார்.

ஆளுநர் உரை என்பது தமிழ்நாடு அரசு தயாரித்து அளிக்கிற கொள்கை அறிவிப்பாகும். அந்த உரையை முழுமையாக வாசிக்க வேண் டியது ஆளுநரின் கடமையும், பொறுப்புமாகும். அதை மீறு கிற வகையில் ஆளுநர் தனது உரையில் இடம் பெற்றிருந்த சில குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்துவிட்டு, இடம் பெறாத சில வார்த்தைகளை கூறியது அப்பட்டமான அரசியல் சட்ட விதிமீறலோடு, சம்பிரதாயங் களையும் புறக்கணிப்ப தாகும்.

இத்தகைய விதிமீறல்கள் தமிழ்நாடு அரசிற்கு விடப் பட்ட சவால் என்பதை விட, அரசமைப்புச் சட்டத்திற்கே விடப்பட்ட அச்சுறுத்தலாகும். தமிழ்நாடு ஆளுநர் இத்தகைய அச்சுறுத்தல்களை தொடர்ந்து செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மை யாகக் கண்டிக்கிறேன்.

ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை அறிவிப்பு என்கிற அடிப்படையைக்கூட புரிந்துகொள்ளாமல் உதாசீனப்படுத்துகிற  ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர். தமிழ்நாடு அரசு தயாரித்த கொள்கை அறிவிப்பான ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த வாசகங் களை தமிழ்நாடு ஆளுநர் தவிர்த்ததைப் போல, ஒன்றிய அரசு தயாரித்த கொள்கை அறிவிப்பு வாசகங்களை குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்மு அவர்கள் அதிலிருந்து சில வாசகங்களை தவிர்த்து வாசித்தால் பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வாரா? பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளுமா?

தமிழ்நாடு ஆளுநர் பொறுப் பிலிருந்து பதவி விலகுகிற வகையில் அனைத்து ஜனநாயக கட்சிகளும் இணைந்து தீவிர மான போராட்டத்தை நடத்து வது மிகமிக அவசியமாகி விட்டது.

-இவ்வாறு தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment