பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்

சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக புதுமையான தொழில்நுட்பங்களுக்கான பன்னாட்டு மாநாடு 

தஞ்சை, ஜன. 27- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும்  சென்னை பூவுலகின் நண் பர்கள் அமைப்பு, பொள்ளாச்சி டாக்டர்.மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து "சுற் றுச்சூழல் நிலைத்தன்மைக்கான புதுமையான தொழில்நுட்பங் கள்" என்ற தலைப்பில் ஒரு பன் னாட்டு மாநாட்டை 24.01.2023 மற்றும் 25.01.2023 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் தொடக்க விழா 24.01.2023 அன்று வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. கல்வி புல முதன்மையர் முனைவர் ஏ.ஜார்ஜ் வரவேற்புரை ஆற்றினார். துணைவேந் தர் டாக்டர். செ.வேலுசாமி, தனது தலைமை உரையில் சுற் றுச்சூழல் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்து ரைத்தார். ஆசியாவின் நிலைத் தன்மை தளத்தின் (டிஎஸ்பி) பேராசிரியரான லாரன்ஸ் சுரேந்திரா தனது தொடக்க உரையில், சமூகத்தை மாற்று வதில் நிலைத்தன்மை எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது என் பதை சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் பால்டி மோர், மேரிலாண்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் அரசு செல்லையா, அவர்க ளோடு இணைந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மய்யத் தின் மதிப்புறு பேராசிரியர் டாக்டர் ஏ.ராமச்சந்திரன் மற் றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்குரைஞர் வெற்றிச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பன் னாட்டு மாநாட்டில் சுமார் 322 பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள். பங்கேற்றனர். முடிவில் ஆற்றல் மற்றும் சுற் றுச்சூழல் மய்யத்தின் இயக்குநர் (பொறுப்பு)  முனைவர் ஜே. சந் தோஷ் நன்றியுரை வழங்கினார்.

25.01.2023 அன்று நிறைவு விழா நடை பெற்றது. இதில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புலத்தின்  முதன்மையர் முனைவர் எஸ்.செந்தமிழ் குமார் வர வேற்புரை வழங்கினார். பல் கலைக்கழக பதிவாளர் பேராசி ரியர் பி.கே.சிறீவித்யா தனது தலைமை உரையில், சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்காக புதுமையான தொழில் நுட்பங் களுக்கான பன்னாட்டு மாநாட்டை ஏற்பாடு செய்த தற்காக மாநாட்டுக் குழு உறுப்பினர்களைப் பாராட் டினார். 

புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்  எஸ். மோகன், தனது சிறப்பு ரையில்  மாசுக்கட்டுப்பாடு மற் றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்து ரைத்தார். பேராசிரியர் முனை வர். எஸ். குமரன் நன்றியுரை யாற்றினார். 

இந்த பன்னாட்டு மாநாட் டில் முதனமையர்கள், இயக்கு நர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற நிறுவனங்களின் தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment