ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 11.1.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் களைக் கொண்டு பிரச்சினையை உருவாக்கும் மோடி அரசின் திட்டம், ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்கிறது தலையங்க செய்தி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* முஸ்லிம்கள் பயப்பட ஒன்றுமில்லை, ஆனால் அவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை கைவிட வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

* 2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 1,83,741 பேர் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர், அதாவது ஒவ்வொரு நாளும் 604 பேர் நாட்டை விட்டு வெளியேறு கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சகத்தின் தரவு காட்டு கிறது.  இதில் எங்கே ‘அச்சே தின்’ என்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப்.

தி ஹிந்து:

* குடியுரிமைச் சட்டம், 1955இன் பிரிவு ‘அரசியலமைப்பு’ பலவீனத்தால் பாதிக்கப்படுகிறதா என்பதை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்மானிக்கும்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment