சென்னை, ஜன. 6- பொறியியல் மற்றும் டிஜிட்டல் உருமாற்ற சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான ஈஇன் போசிப்ஸ், தற்போது 11ஆவது அலுவலகத்தை சென்னை யில் துவங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டில், வலுவான வாடிக்கையாளர் தேவை மற்றும் வணிக வளர்ச்சியைப் பூர்த்தி செய்வதற்காக ஈஇன்போசிப்ஸ் அதன் விரிவாக்கத் தின் ஒரு பகுதியாக எகிப்து, இந்தியா மற்றும் உலகளவில் (மற்றும்) மய்யங்களைத் திறந்தது.
இந்நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் உட்பொதிக் கப்பட்ட அமைப்புகள், வன்பொருள் வடிவமைப்பு, சிலிக்கான் வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, கிளவுட் மற்றும் பிளாக்செயின் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்ப துறைகளில் தற்போது 35 பொறியாளர்களுடன் செயல்பட்டு வரும் ஈஇன்போசிப்ஸ் நிறுவனம், அடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் சென் னையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொறியாளர்களை பணியமர்த்தவுள்ளது.
சென்னை அலுவலகம் திறப்பு விழா குறித்து ஈஇன் போசிப்ஸ் தலைமை இயக்க அதிகாரி சுமித் சேத்தி கூறிய தாவது, எங்களது ஊழியர்கள் தனிப்பட்ட வளர்ச்சியை அனுபவிக்கும் அதே வேளையில் எங்கள் மக்கள் தொழில் ரீதியாக சிறந்து விளங்குவதற்கு உதவும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம். எங்களது பணியாளர்கள் தனிப்பட்ட வளர்ச்சியை பெறுகிற அதே வேளையில் தொழில் ரீதியாக சிறந்து விளங்குவதற்கு உதவுக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம்என அவர் தெரிவித்துள்ளார்.
திருக்குறள் பேச்சுப் போட்டியில் வெற்றி சென்னை மாணவிகள் சாதனை!
சென்னை, ஜன. 6- தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில், சென்னை, அம்பத்தூரில் இயங்கி வரும் சேது பாஸ்கரா நிறைநிலை மேல்நிலைப் பள்ளி மாணவி ப. யாழினி இடைநிலைப் பிரிவில் இரண்டாம் பரிசையும், சென்னை, முகப்பேரில் இயங்கி வரும் வேலம்மாள் வித்யாலயா மாணவி சிறீபத்மப்ரியா மேல்நிலைப் பிரிவில் மூன்றாம் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சிறீராம் இலக்கியக் கழகம், ‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)', ‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)', ‘கல்லூரிப் பிரிவு' என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை மாநில அளவில் நடத்தியது. இதில் மொத்தம் 1597 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இடைநிலைப் பிரிவில் வளையபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வி.நா.தமிழ்க்கனி முதல் பரிசினை பெற்றார்.
மேல்நிலைப் பிரிவில் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பண்பாட்டுப் பள்ளி மாணவி பா.ஹரி ஷினி முதல் பரிசினை வென்றார்.
கல்லூரிப் பிரிவில் கோவை பூ.சா.கோ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் மு.கவிநிலவன் முதல் பரிசினை வென்றார்.
முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ. 10,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ. 7,500 ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 5,000 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
உயர்கல்வி மாணவர்களுக்கு
ஆன்லைன் திறனாய்வு தேர்வு
சென்னை, ஜன. 6- இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான டைம் வரும் 8 ஜனவரி 2023 அன்று பொது நுழைவு தேர்வு ஆர்வலர்களுக்கான 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான (CAT23/24) ஆன்லைன் திறனாய்வு தேர்வுகளை நடத்தவுள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இருவகை நேரங்களை கொண்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இரண்டு நேரங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.
தேர்வில் வெற்றி பெற்று ஜனவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதிக்குள் டைம் கல்வி நிறுவனத்தின் CAT23 பாடதிட்டத்தில் இணையும் அனைத்து மாணவர்களுக்கும் ரூபாய் 5000 தள்ளுபடி வழங்கப்படுவது (நிபந்தனைக ளுக்கு உட்பட்டது) இந்த தேர்வின் மற்றொரு சிறப்பம்ச மாகும். உங்களுக்கு அருகாமையில் உள்ள டைம் கல்வி நிறுவனத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குறைந்த பட்ச உறுதியான தள்ளுபடியை அனைவரும் பெறலாம்.
பதிவு இணைப்பு: <https://www.time4education.com/local/articlecms/page.php?id=4430>
No comments:
Post a Comment