பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

பிரதமர் மோடி பற்றியஆவணப்படத்திற்கு தடை ஏன்?

மின்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் படி ஆவணப் பட காட்சிப் பதிவுகள், கருத்துகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு ஒன்றிய அரசு உத்தர விட்டிருக்கிறது. இதை ட்விட்டர், யூடியூப் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு காட்சிப் பதிவுகளை நீக்கி வரு கின்றன. 

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல் அமைச்சராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி 17.1.2023 அன்று ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா - மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவணப் படத்தில் பிரதமர் மோடி குறித்து உண்மைக் கருத்துகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

பிபிசியின் ஆவணப் படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட ஒன்றிய அரசு கடந்த 18ஆம் தேதி தடை விதித்தது. இந்த சூழலில் பிபிசி ஆவணப் படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பிபிசி ஆவணப் படத்துக்கான இணைப்பும், சமூக வலைதளங்களில் பதிவிடப்படு கிறது. இத்தகைய சமூக வலைதளப் பதிவுகளுக்கு ஒன்றிய அரசு தற்போது தடை விதித்துள்ளது. ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் அரசின் உத்தரவை ஏற்று, காட்சிப் பதிவுகளை நீக்கி வருகின்றன.

இதுகுறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறிய தாவது: யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிபிசி ஆவணப் படம் வெளியாக ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆவணப் படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் ஒருமைப் பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.

எனவே ஆவணப் படம் தொடர்பான கருத்துகளை நீக்க யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பிபிசி ஆவணப் படத்துக்கான இணைப்புகளை நீக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப் படத்தின் 2ஆம் பாகமும் வெளியிடப்படுவதாக அறிவிக்கப் பட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, பிரதமர் மோடி உள்பட வெளிநாட்டு தலை வர்கள் குறித்து ஆவணப் படம் வெளியிட தேவை யில்லை. இங்கிலாந்து மேனாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் உள்பட சொந்த நாட்டின் தலைவர்கள் குறித்த ஆவணப் படங்களை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நடுநிலையாளர்கள் விமர்சித்து உள்ளனர்.

பிபிசி தொடர் நீக்கம்; 

பிரதமர் பயப்படுவது தெரிகிறது..காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பிபிசி ஆவ ணப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளது. பிபிசி தயா ரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2002இல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசின் இரகசிய விசார ணையில் கலவரத்துக்கு மோடியே நேரடி காரணம் எனத் தெரிய வந்ததாக ஆவணப்படத்தில் கூறப் பட்டுள்ளது. ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேரைக் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்த தாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரி விக்கப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளி யிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை மேனாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக் களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவர ஒளிப்படங்கள் மற்றும் அறிக்கை களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவ ணப்படத்தில் பேசியுள்ள ஒருவர், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார். இதை யடுத்து, இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பேசிய ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ''இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய் யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிறு வனத்தின் மனநிலையை இது பிரதிபலிக்கிறது. ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோ பாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல'' என விமர்சித்துள்ளார்.  அதைத் தொடர்ந்து சமூக வலை தளங்களில் அந்த ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளது.

- - - - - 

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை அய்தராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் திரை யிட்டனர், இந்த ஆவணப்படக் காட்சி ஒன்றிய அரசு தடைவிதிக்கும் முன்பே திரையிடப்பட்டதாக மாண வர் அமைப்பு கூறியுள்ளது. 

இந்த நிலையில் திரையிடல் தொடர்பாக பல் கலைக்கழகத்திடம் ஒன்றிய அரசு விளக்கம் கேட்டு உள்ளது.  இதனை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அவர்களிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) புகார் அளித்தது.

- - - - -

ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்ட பிபிசி தயா ரித்த பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஆவணப் படத்தை டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு திரையிட திட்ட மிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யு) உள்ள மாணவர்கள் அமைப்பு, ஒன்றிய அரசால் முடக்கப்பட்ட பிபிசி ஆவணப் படத்தை திரையிட திட்டமிட்டு, அதனை பார்வையிட மாணவர்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தது.

- - - - -

குஜராத்தில் கலவரம் நடந்தபோது, முதல் அமைச்சராக நரேந்திர மோடி இருந்தார். ஜனநாயக நெறிப்படி, இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர் முதல் அமைச்சர் அல்லவா?

கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வு நடந்த சூழ்நிலையில் அதில் இறந்து போனவர்களின் உடல்களை அவர் களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்காமல், ஒரே இடத்தில் கொண்டு வந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லுவதற்குக் கட்டளை இட்டவர் யார்?

காவல்துறை அதிகாரிகளைக் கூட்டி ‘மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன் - காரியத்தை முடியுங்கள்!' என்று முதல் அமைச்சர் கூறியதாகக் காவல்துறை அதிகாரியே சொல்லவில்லையா?

குஜராத் கலவரம் நடந்த சூழலில் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி என்ன கூறினார்?

‘எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான்வெளிநாடு போவேன்?' என்று கூறிடவில்லையா?

அரியலூரில் ரயில் விபத்து நடந்தது; நூற்றுக் கணக்கானோர் மாண்டனர். அதற்குப் பொறுப்பேற்று, ரயில்வேத் துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியும் இணை அமைச்சராகவிருந்த ஓ.வி.அழ கேசனும் பதவியிலிருந்து விலகவில்லையா?

இந்தப் பொறுப்புணர்ச்சியை நரேந்திர மோடியிடம் எதிர்பார்க்க முடியாதுதான். காரணம் அவர் அடிப் படையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்!

No comments:

Post a Comment