கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் கனிமொழி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் கனிமொழி வலியுறுத்தல்

சென்னை,ஜன.27- கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று குடியரசு  நாள் விழா கருத்தரங்கத்தில் திமுக மக்களவை உறுப் பினர் கனிமொழி வலியுறுத்தினார்.

குடியரசு நாளை முன் னிட்டு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் ‘அரசமைப்புச் சட்டத்தையும் நாடாளு மன்ற ஜனநாயகத்தையும் காத்திடுவோம்: தமிழ் நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைமசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப் புதல் வழங்கிட வலியுறுத் துவோம்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று  (26.1.2023) கருத்தரங்கம் நடந்தது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு‘ஜனநாயகம் காக்க ஒன்றிணைவோம்’, ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு உருவாகிவரும் சவால்கள்’ ஆகிய தலைப்புகளில் கருத்துரை யாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தலைவர் பி.ரத்தினசபாபதி, பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சுரேஷ் பாபு, மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுமத்தின் மேனாள் உறுப்பினர் அனில் சட்கோபால், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற் றனர். இதில் கனிமொழி பேசியதாவது:

அரசமைப்புச் சட் டத்தை பாதுகாப்பதில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை அனைவரும் உணரவேண்டும். நாட்டில் மக்களின் பேச்சுரி மைகள் பறிக்கப்படுகிறது. ஒரு சமூகத்தில் ஒருவர் சொல்லும் எந்த கருத்தாக இருந்தாலும் அதுகட்டா யம் யாரையாவது புண் படுத்தும். புண்படுத்தாமல் யாராலும் கருத்து சொல்ல முடியாது. புரிந்துகொள்ளுதல் என்ற நிலை உருவாகும் போது தான் சமூகத்தில் மாற்றங்கள் வரும். இது தான் ஜனநாயகத்தின் அடிப்படை.

தற்போது, யார் ஆட் சிக்கு வரவேண்டும் என்று தேர்ந் தெடுக்கக் கூடிய உரிமைகூட மக்க ளுக்கு இல்லை. 30 வரு டத்தில் 50 சதவீத உயர் கல்விக்கான நிலையை இந்தியாவில் உருவாக்கி விட வேண்டும் என்பதற்காக புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர். தமிழ்நாடு இந்த இலக்கை எப் போதோ தாண்டிவிட் டது.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய தேவைகள், பிரச்சினைகள் என்ன என்பது ஒன்றிய அரசுக்குத் தெரியாது. எங்கள் மாணவர்களுக்கு என்ன வேண்டும் என்பது எங் களுக்குத்தான் தெரியும். அவர்களின் எதிர்காலத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். எனவே, கல்வியை மீண்டும் மாநில பட்டியலில்  கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment