ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 24.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

 காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் என தனது இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி பேச்சு

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

 கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவுச் சின்னத்தை மேலும் மேம்படுத்த தமிழ் நாடு பொதுத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அழிந்து வருவதாக ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன. அவற்றைச் சுரண்டுவதற்கு மோடி அரசு நண்பர்களுக்கு உதவுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே  குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

 2002இல் ஒரு முதலமைச்சரின் செயல்களை கேள்வி கேட்பது, 2023இல் அதே நபர் இப்போது பிரதமராக இருப்ப தால் இந்தியாவின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக கூறுவது அபத்தமானது என்று பிபிசி ஆவணப்படத்தைத் தடுப்பது காலனித்துவமானது என தேசிய நீதித்துறை ஆணையத்தின் மேனாள் இயக்குநர் ஜி.மோகன் கோபால் கூறுகிறார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

குடியரசு தின விழாவை ராஜ் பவனுக்குள்ளேயே நடத்துமாறு தெலுங்கானா ஆளுநரிடம் கே. சந்திரசேகர் ராவ் அரசு தெரிவித்துள்ளது

- குடந்தை கருணா


No comments:

Post a Comment