து.ராஜா சகோதரர் கண்ணதாசன் மறைவு - இரா.முத்தரசன் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

து.ராஜா சகோதரர் கண்ணதாசன் மறைவு - இரா.முத்தரசன் இரங்கல்

சென்னை,ஜன.22- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  தோழர் து.ராஜாவின் சகோதரரும், வேலூர் மாவட்டம், சித்தாத் தூர் ஊராட்சியின் மேனாள் தலைவருமான து.கண்ணதாசன் (வயது 62) 21.01.2023 அன்று அதிகாலையில், சித்தாத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது. சித்தாத்தூரில் வசித்து வந்த துரைசாமி - நாயகம்மாள் குடும்பத்தில் நான்கு  சகோதர்கள், ஒரு சகோதரியுடன் பிறந்தவர் கண்ணதாசன்.

கண்ணதாசன் சித்தாத்தூரில் குடும்பத்தோடு வாழ்ந்து, பொதுமக்களின் நல்வாழ்வுக்கும், ஊர் வளர்ச்சிக்கும் பாடு பட்டு வந்தவர். மக்களின் நன்மதிப்பைப் பெற்று, ஊராட்சித் தலைவர், ரோட்டரி சங்கத் தலைவர், கூட்டுறவு வங்கி இயக் குநர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர்

இவருக்கு சித்ரா என்கிற மனைவியும், கே.கோகுல் என்கிற மகனும், கே.ஆனந்தி என்கிற மகளும் இருக்கிறார்கள். அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் தோழர் து. ராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் 1,105 காலியிடம் நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை: 24ஆம் தேதி நடக்கிறது

கோவை, ஜன. 22- கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 18 உறுப்புக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 567 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 413 இடங்களும் உள்ளன. இதற்கு, இணைய வழி  மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 வரை பெறப்பட்டது. மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் 1,105 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை உடனடி மாணவர் சேர்க்கையின் (ஸ்பாட் அட்மிஷன்) மூலம் நாளை மறுநாள் 24ஆம் தேதி நிரப்ப பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உடனடிக் கலந்தாய்வில், பொதுக் கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று அதனை தவற விட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

இந்த உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்க பெற்ற மாணவர்களிடம் மட்டும் கலந்தாய்வுக்கு கட்டணம் பெறப்படும். பொதுப்பிரிவினர் ரூ.3 ஆயிரம், தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினர் ரூ.1,500 கட்டணம் செலுத்த வேண்டும். இதில், நகர்வு முறை கிடையாது. இணைப்பு கல்லூரிகளில் ஆண்டு கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். மாணவர்களின் தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம். இந்த உடனடி சேர்க்கைக்கு பிறகு காலியிடங்கள் இருந்தால், ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மேலும், மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், காலியிடங்களுக்கான அட்டவணை ஆகியவை பல்கலைக் கழகத்தின் www.tnau.ucanapply.com என்ற இணையத ளத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் 0422-6611345 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்புகள் முகாம்: 

1.15 லட்சம் பேருக்கு வேலை

அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

தஞ்சாவூர், ஜன. 22- தொழில்பயிற்சி நிலையங்களில் (அய்டிஅய்) படிப் போருக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்றார் தொழிலாளர் நலத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச் சர் சி.வி. கணேசன்.

தஞ்சாவூர் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் வெள்ளிக் கிழமை ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் மாணவர்களிடம் பேசியது: தமிழ்நாட்டில்  உள்ள 91 அரசு அய்.டி.அய்.களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவ தற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு செய்தார். இதில், தஞ்சாவூர் அய்டிஅய்க்கு ரூ.30 கோடி வழங்கப் பட்டது.

ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற மேலைநாட்டு மாணவர்களுக்கு இணையாக தமிழ்நாட்டிலுள்ள அய்.டி. அய். மாணவர்களும் ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் போன்ற நவீன முறைகளில் பயிற்சி பெறும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும், 71 அய்டிஅய்-களில் தலா ரூ. 3.70 கோடியில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காகக் கட்டுமானமும் நடைபெறுகிறது. இப்பணி முடிந்த பிறகு நவீன வசதி, தொழில்நுட்பங்களுடன் மாணவர்கள் படிக் கும் சூழ்நிலை ஏற்படும்.

தமிழ்நாட்டிலுள்ள அரசு அய் டிஅய்-களில் நிகழாண்டு மாணவர் சேர்க்கை 93 சதவீதமாக உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் அய்.டி.அய்-களில் இடமே கிடைக்காத நிலை ஏற்படும். அய்.டி.அய்-யில் படிக்கும் மாண வர்களுக்கு மட்டுமே படித்து முடித்தவுடன் வேலை காத்துக் கொண்டிருக்கிறது. பெயிண்டர், ஏசி மெக்கானிக், எலக்டிரிசியன், பிளம்பர் போன்ற பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறையாக உள்ளது. பெரிய நிறுவனங்களில் இது போன்ற பணிக்கு ஆள்கள் கிடைக் காமல் அலைகின்றனர்.

எனவே, அய்டிஅய்இல் இரு ஆண்டுகள் படித்தால், உடனடி யாக வேலை தயாராக உள்ளது. நல்ல தேர்ச்சியும், அனுபவமும் பெற்று வரும் அய்டிஅய் மாணவர் களை வரவேற்க நாடு காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில்  இதுவரை 70 இடங்களில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 1.15 லட்சம் இளைஞர்களுக்கு இந்த அரசு பணிவாய்ப்பு பெற்றுத் தந்துள்ளது என்றார் அமைச்சர் கணேசன்.

பின்னர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நடத் தப்பட்ட தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு அமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டப் பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திர சேகரன் (திருவை யாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆர்.உஷா புண்ணிய மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment