பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரியார் புரா கிராமங்களில் பொங்கல் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரியார் புரா கிராமங்களில் பொங்கல் விழா

வல்லம், ஜன. 14- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பாக பெரியார் புரா கிராமங் களில் 12.01.2023 அன்று பல்கலைக்கழக பேராசிரி யர்கள் மற்றும் மாணவர் கள் பங்கேற்ற பொங்கல் விழா மற்றும் கலை விழா நடைப்பெற்றது.  

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம், கிராம மக்களுக் கும் நகர்ப்புற வசதிகள் கிடைக்க வேண் டும் என்ற நோக்கத்தோடு பெரியார் புரா திட் டத்தை 67 கிரா மங்களில் செயல்படுத்தி வருகின்றது. 

பெரியார் மணியம்மை பல்கலைக்கழம் சார்பாக பத்து பெரியார் புரா கிரா மங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாண வர்கள் மற்றும் ஆசிரியர் களுடன் இணைந்து பொங் கல் விழா கொண் டாடப் பட்டது. இவ் விழாவில் பாரம்பரிய விளையாட்டு கள், ஓட்டபந்தயம், பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி என பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டு பரிசு கள் வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கட்டட எழிற்கலைதுறை சார்பாக ‘உன்னத் பாரத் அபியான்' கிராமமான தெற்கு பாளையப்பட்டி யில் உள்ள அரசுப் பள்ளி யில் சுவர் ஓவியம் வரை யப்பட்டது. பொங்கல் விழாவில் 300 க்கும் மேற் பட்ட அரசு பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

பல்கலைக்கழகத்தில் உள்ள  கட்டடவியல் துறை, கட்டட எழிற்கலை துறை, கல்வியல் துறை, கணினி அறிவியல் மற் றும் பொறியியல் துறை, இயந்திரவியல் துறை, மிண் னணு மற்றும் தக வல் தொடர்பியற் துறை, மேலாண்மை துறை  மென்பொருள் பொறியியற் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியற் துறை, மற் றும் உயிர் தொழில்நுட் பவியல் துறை சார்ந்த 52 பேராசிரியர்கள் மற்றும் 483 மாணவர்கள் இந்தப் பொங்கல் விழாவிற்கான ஏற்பாட்டினை செய்தி ருந்தினர். 

இந்நிகழ்ச்சியில் பல் கலைக்கழக துணைவேந் தர் பேரா வேலுச்சாமி மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் (பொ) முனை வர் ஆனந்த ஜெரார்டு ஆகியோர் வல்லம், வல் லம் புதூர், முன்னையம் பட்டி மற்றும் தெற்கு பாளையப்பட்டி கிராமத் தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச் சியை பெரியார் ஊரக வளர்ச்சி மய்யத்தினர் பல்கலைக் கழகத்தில் உள்ள பல்வேறு துறை களுடன் இணைந்து ஒருங்கிணத்து விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்தி யிருந்தனர்.

No comments:

Post a Comment