தடி எடுத்த தண்டல்காரர்கள்? தாய்மதம் திரும்பச்சொல்லி கிறிஸ்தவர்களைத் தாக்கிய ஹிந்துத்துவ வெறியர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

தடி எடுத்த தண்டல்காரர்கள்? தாய்மதம் திரும்பச்சொல்லி கிறிஸ்தவர்களைத் தாக்கிய ஹிந்துத்துவ வெறியர்கள்

மதவெறியே, உன் பெயர்தான் ஹிந்துத்துவாவா?

ஆங்கிலப் புத்தாண்டு அன்று கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்து அமைப்பினர், கிறிஸ்தவ கல்வி நிறுவனம் ஒன்றின் முன் இருந்த கிறிஸ்தவ கடவுளர் உருவங்களைத் தாக்கி சிதைத்து வருகின்றனர். இந்தக் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும் படிப்பவர்கள் ஹிந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2023 மாநில தேர்தலுக்காக சங்கிகள் பிரிவினையை ஏற்படுத்த மதப்பிரச்சினையை கையில் எடுத்து உள்ளார்கள்.

ராய்ப்பூர், ஜன.3 சத்தீஸ்கர் மாநிலத்தில் தாய்மதமான ஹிந்துமதத்திற்கு மாற மறுத்த கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

 சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் நாரா யண்பூர் மற்றும் கோண்டகான் பகுதி களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சில் லறை அமைப்புகள் சேர்ந்து அவர்களை கட்டாயமாக ஹிந்து மதத்திற்கு மதமாற்றம் செய்ய வலியுறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து சமூகம் மற்றும் மதச்சார்பின்மை ஆய்வு மய்யத்தின் இயக்குநர் இர்பான் தலைமையிலான உண்மை கண்டறியும் ஆய்வுக் குழு அந்தப் பகுதியில் சென்று விசாரணை நடத்தியது.

அவர்களது விசாரணையில், “கடந்த டிசம்பர் மாதம் சுமார் 1000 கிறிஸ்துவ பழங் குடியினரை வலுக்கட்டாயமாக ஹிந்து மதத்திற்கு மதமாற்றம் செய்ய வலியுறுத்தி ஹிந்துத்துவ அமைப்புகள் தாக்கியுள்ள னர். நாராயண்பூர் பகுதியில் 18 கிராமங் களிலும், கோண்டகான் பகுதியில் 15 கிராமங்களிலும் தொடர்ச்சியான தாக்கு தல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், சுமார் 1,000 கிறிஸ்தவ பழங்குடியினர் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். தங்களது குழு நடத்திய விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்ய உள் ளோம்.” என்று தெரிவித்தனர். 

இந்தநிலையில், சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் உள்ள கோர்ரா கிராமத்தில் புத்தாண்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள் பட பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் பத்திரி கையாளர்களிடம் கூறுகையில், “கிட்டத் தட்ட 400 முதல் 500 பேர் கொண்ட கும்பல் கோர்ரா கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். எங்களை கட்டைகளால் தாக்கினர். நாங்கள் அந்நிய மதத்தைப் பின்பற்றுவ தாகக் குற்றம் சாட்டிய அவர்கள் எங்களை காடுகளில் தஞ்சமடையச் சொன்னார்கள்.” என்றார்கள். இந்த தாக்குதல் தொடர்பாக சில ஹிந்து அமைப்புகள் மீது வழக்கு பதிந்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது

 இந்த ஆண்டு சத்தீஷ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது, அங்கு பூபேஷ் பாகல் தலைமையிலான ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை, மேலும் பூபேஷ் பாகல் ஊழல் கறை படியாத முதலமைச்சர் என்ற பெயர் எடுத்துள்ளார். மேலும் தவறு செய்யும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப் பினர்கள்மீது கடுமையான நடவடிக் கைகளை எடுத்துவருகிறார். இதனால் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே மக்கள் உள்ளனர். இந்த நிலையில் அங்கு பாஜகவை ஆட்சியில் அமரவைக்க ஹிந் துத்துவ சில்லறை அமைப்புகள் இப்போது ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டனர். காவல்துறை நட வடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஹிந்து விரோத அரசு என்று கூறும் திட்டத்துடன் பாஜக மற்றும் அதன் ஆதரவுக் கும்பல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment