செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 12, 2023

செய்திச் சுருக்கம்

கட்டாயம்

‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தில் பயனாளிகளுக்கு 13ஆவது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் என மேலாண்மை - உழவர் நலத்துறை அறிவிப்பு.

உத்தரவு

கோவில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோவில் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறநிலையத் துறை ஆணையருக்கு அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன்  அனுமதி வழங்கி உத்தரவு.

தேர்வு

என்.அய்.டி., அய்.அய்.அய்.அய்.டி., சி.எப்.டி.அய்., போன்ற கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேர மாணவர்கள் குறைந்த பட்சம் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை தகவல்.

அறிவிப்பு

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா மரணமடைந்ததையொட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.


No comments:

Post a Comment