பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத்தரங்கம்

 

திருச்சி, ஜன. 29- திருச்சி பெரியார் மருந்தி யல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பாக 12.01.2023 அன்று காலை 11.00 மணியளவில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத் தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிட மாணவர் கழக உறுப்பினர் செல்வி இல. அனிதா வரவேற்புரையாற்றினார். 

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தா மரை பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றினார்.  அவர் தமது உரையில் உழைப்பின் உன்னதத்தையும் உழவர்களின் மேன்மையையும் பறை சாற்றுவது பொங்கல் விழா என்றும் பண்டிகைகளையும், விழாக்களையும் பெரிதும் எதிர்த்த அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களால் இனம் காட்டப்பட்ட ஒரே விழா, ஒப்பற்ற விழா பொங்கல் விழா என்றும் உரை யாற்றினார். 

சமத்துவத்தை எடுத்துரைக்கும்

ஜாதி, மத பேதம் கடந்து சமத்து வத்தை எடுத்துரைக்கும் பொங்கல் விழாவை மட்டும்தான் தந்தை பெரியார் அவர்கள் தமிழன் விழாவாக  அறிவித்தார். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒரே விதமாக கொண்டாடக்கூடிய விழா பொங்கல் விழா என்றும் உரையாற்றினார். மேலும் தந்தை பெரியார் அவர்கள் பெரிதும் விரும்பிய சமத்துவத்தை நிலைநாட்ட தமது 90 வயதிலும் ஓய்வறியாது சமுதாயப்பணியாற்றி செய்து வருபவர் நமது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள். நீட் ஒழிப்பு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் இடஒதுக்கீடு போன்ற வற்றிற்காக முதலில் குரல் கொடுப்பவர் நமது நிறுவனத் தலைவர் அவர்கள். அத்தகைய தலைவரின் தலைமையில் நடைபெறக்கூடிய இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மருந்தியல் கருத் துக்கள் மட்டுமல்லாது பகுத்தறிவுக் கருத்துக்களையும் தமிழின உயர்வை போற்றும் பொங்கல் விழாவினையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உரையாற்றி அனை வருக்கும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

விவசாயிகளின் உழைப்பால்...

பொங்கல் விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வ நாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல் லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் மேனாள் குழந்தை மருத்து வத்துறை தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் கு.முத்துக்குமார் “தமிழர் திருநாள் பொங்கல் விழா”  என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் இயல், இசை, நாடகம் என்ற அளவில் இப்படித்தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற அளவிற்கு மிகச்சிறப்பாக நடைபெறக் கூடிய பெரியார் மருந்தியல் கல்லூரியின் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக உரையாற்றினார். மேலும் “ஆடிப் பட்டம் தேடி விதை” என்ற விதத்தில் விதைத்த விதை நெல் வளர்ந்து விவசாயிகளின் உழைப்பால் விளைச்சலை எட்டி, அறுவடை செய்யும் நாளினை தமிழர் திருநாளாக கொண்டாடுகி றோம். தந்தை பெரியார் அவர்களைப் போன்று ஆராய்ந்து, தமிழினத்திற்கு ஒன்றை அடையாளம் காட்ட எவ ராலும் முடியாது. அந்த வகையில் விழாக்களையும் கொண்டாட்டங்க ளையும் தவிர்த்த தந்தை பெரியார் அவர்கள் தமிழர்களுக்கென்று ஒரு விழாவாக பொங்கல் விழாவினை அறிவித்தார்கள்.  அத்தகைய பொங்கல் விழாவிலும் மத சாயம் பூசும் அளவிற்கு மகர சங்கராந்தி என்றும் இந்திர விழா என்றும் ஆரியக்கூட்டம் கொண்டாட ஆரம்பித்தது. 

தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு

2008இல் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்று அன்றைய முதல மைச்சர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. பின்னாளில் அது மாற்றப்பட்டது.  ஆபாசங்கள் நிறைந்த மூடக்கருத்தைக் கொண்ட சித்திரை மாதத் தமிழ் புத் தாண்டை தந்தை பெரியார் அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு எதிர்த்தார். அறிவு ஆசான் தந்தை பெரியார், மறை மலை அடிகள், கி.ஆ.பெ. விஸ்வநாதன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றி ணைந்து தை முதல் நாளினை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார்கள். அது மட்டுமல்ல பொங்கல் விழா என்றால் தமிழர் திருநாள், திருவள்ளுவர் நாள், உழவர் நாள், இயல் தமிழ் நாள், இசைத் தமிழ் நாள், நாடகத் தமிழ் நாள் என்று தொடர்ந்து ஒருவார காலம் தமிழினம் கொண்டாடும் வகையில் ஏற்படுத்தித் தந்தனர். இன்றும் உலகத்தமிழர்கள் அனைவரும் பொங்கல் விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட் டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. பெரியார் பாசறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் வழி காட்டுதலில் பயிலக்கூடிய மாணவர்கள் இன்றைய சூழலை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

திராவிட இனத்தின் பெருமையை...

தமிழன் என்றால், தமிழினம் என்றால், தமிழ்நாடு என்றால் வரலாறு தெரியாத ஆரியக்கூட்டம் பதைபதைக் கிறது. இந்நேரத்தில் திராவிட இனத் தின் பெருமையை, தமிழ்நாட்டின் பெருமையை மாணவ சமுதாயம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதனை பொங்கல் திருநாள் செய் தியாக அறிவித்து வீரமங்கை வேலு நாச்சியார் நாடகத்தில் சிறப்பாக பங்கு பெற்ற மாணவிகள் மற்றும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சி புரிந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி,  பெரியார் மன்றத்தின் செயலர் பேராசி ரியர் கே.ஏ.எஸ். முகமது ஷபீஃக், பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் மரு. பி. மஞ்சுளா வாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக திராவிட மாண வர் கழக உறுப்பினர் செல்வி கு. பிரியங்கா அவர்கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 

முன்ன தாக நான்காமாண்டு இளநிலை மருந் தியல் பட்டப்படிப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment