உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்? ஒன்றிய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்? ஒன்றிய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஜன.27- சென்னை உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என்று ஒன்றிய தொல்லியல் துறைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒன்றிய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள், கட்டடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என, அதிருப்தி தெரிவித்தது.

10 ஆண்டுகள் ஆகியும் சென்னை கன்னிமாரா நூலக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை எனவும், உயர்நீதிமன்றம் கட்டடம் முறையாக பராமரிக்கப் படுகிறதா? என பலமுறை நினைவூட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது.

இதனிடையே, போதுமான பணியாளர்கள் இல்லை என்று, தொல்லியல் துறையில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் ஒன்றிய தொல்லியல் துறையில் எத்தனை பணியாளர்கள் உள்ளனர்? பணி களை முடிக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டும்? என கேள்வி எழுப்பி, வழக்கை வருகிற 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment