மாநில அரசின் முடிவை ஆளுநர் தடுப்பது மக்களை அவமதிக்கும் செயல் - திருச்சி சிவா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

மாநில அரசின் முடிவை ஆளுநர் தடுப்பது மக்களை அவமதிக்கும் செயல் - திருச்சி சிவா

மதுரை, ஜன.24-  ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல்வாதி போன்று செயல் படுவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்து உள்ளார்.

திமுக சட்டத்துறை சார்பில், ‘அரசமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் .  திமுக சட்டத் துறை செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ தலைமையில்  மதுரையில் 22.1.2023 அன்று நடை பெற்றது.

மேனாள் நீதிபதி அக்பர் அலி

உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அக்பர் அலி உரையில், "விக்டோ ரியா மகாராணி ஆட்சி செய்த காலத்தில் அவர் களது ஏஜெண்டுகளாக ஆளு நர்கள் நியமிக்கப் பட்டனர். ஆளுநர் நாட்டுக்கு தேவையா என்பது இப்போது புதிது அல்ல. ஆளுநர்கள் நியமிக்கப் பட்டது முதலே இந்த விவாதம் இருக்கிறது. பிரிட்டிஷ் கால நடை முறையை ஏன் தொடர வேண்டும் என பலரும் அப் போதே எதிர்த்துள்ளனர். இதையடுத்தே, ஆளுநர்கள் தன்னிச்சை யாக செயல்பட முடியாது; மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அமைச்சரவை யின் முடிவுக்கு அவர் கட்டுப் பட வேண்டும் என்ற வரையறை களுடன் ஆளுநர்கள் நியமிக் கப்பட்டனர். 

எனவே, ஆளுநர், மாநில அரசின் நிர்வா கத்தை யொட்டி செயல் படவேண்டும்" என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா

திமுக நாடாளுமன்ற உறுப் பினர் திருச்சி சிவா உரையில், "தற்போதைய சூழலில் இது போன்ற கருத்தரங்கம் அவசியம். நாடு இக்கட்டான நிலையை சந்திக்கும் போது முன்னணியில் நிற்பவர்கள் வழக்குரைஞர்கள். தமிழ்நாடு ஆளுநரில் அண்மைக்கால செயல்பாடுகள் பல்வேறு கேள் விகளை எழுப்பியுள்ளன. 

பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் இது போன்ற நிலை தொடர் கிறது. இது ஏற்புடைய தல்ல.

அரசியல் சட்டப் பிரிவு 356-அய் பயன்படுத்த முடியாத சூழலில் ஆளுநர்கள், மாநில அர சுக்கு எதிராக இதுபோன்று செயல் படுகின்றனர்.

திமுகவின் வழக்குரைஞர் அணி மட்டுமின்றி மாணவரணி, இளைஞரணி ஆகிய அணிகளும் ஆளுநரின் செயல் பாடுகளுக்கு எதிரான கருத்த ரங்குகளை நடத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

பெயரளவுக்கு மாநில கூட்டாட்சி தத்துவம் உள்ளது. நமது அரச மைப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, அன்றைக்கே அண்ணா வலியுறுத்தினார். 

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி வந்தபிறகு ஏதோ புரட்சி நடப்பது போன்று பரப்புகின்றனர். அவருக்குரிய கடமையை முறையாக செய்ய வேண் டும்.

தேவையற்றதை மக்களிடம் பேசி அவர் குழப்பம் செய்கிறார். கவுரவ மிக்க ஆளுநர் பதவியை அவர் காப் பாற்ற வேண்டும்.

அரசியல் வாதி போன்று செயல்படுவதை தவிர்க்க வேண்டும். தமிழ் நாடு சட்ட பேரவை கொண்டு வந்த ஏறக் குறைய 20 மசோதாக் களை ஆளுநர் கிடப்பில் போட் டுள்ளார்.

மாநில அரசின் முடிவை அவர் தடுப்பது மக்களை அவமதிக்கும் செயல்.

அமைச்சரவை தயா ரித்த உரையிலுள்ள தகவல்களை வாசிக்க தவிர்த்ததால் அவ ருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா வழியில் வந்த வர். அப்படித்தான் எதிர் வினை யாற்றுவார். நாங் கள் தயாரித்த உரை பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு இங்கு வேலை யில்லை.

தேர்ந்தெடுத்த அர சுக்கு துணை நிற்கவே வந்துள்ளீர்கள். சட்ட சபையில் ஆளுநர் வெளி யேறிய நிகழ்வு எல்லா மாநிலங்களிலும் பேசப் படுகிறது. தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற நீங்கள் யார்?

ஆளுநரை நீக்கும் அதி காரம் நாடாளுமன்றத் திற்கு வழங்க வேண்டும். அய்ஏஎஸ், அய்பி எஸ் தேர்ச்சி பெற்றவர்களி டம் பேசிய ஆளுநர், ஒன்றிய - மாநில அரசுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால் ஒன்றிய அரசு பக்கமே இருக்க வேண்டும் என அறிவுறுத் துகிறார்.

இவருக்கு முன் இருந்த ஆளுநர்கள் அமைதியாக சென்றனர். ஆளுநர் ஆர்என்.ரவி நிதானமாக செயல்பட வேண்டும்.

ஆளுநரின் நடவடிக் கைகள் அரசை தேர்வு செய்த மக்களை அவமதிக் கும் செயலாகும். தமிழ் மொழியே தெரியாத ஒருவர் எப்படி தமிழ் மொழியில் உள்ள குறைகளை கூற முடியும். இந்தியா ஒரு மதச்சார் பற்ற நாடு.

நாம் அனைத்து மதத் தினரையும் பொதுவாகத் தான் பார்க்க வேண்டும். 

நீதிபதிகளை மக்கள் பிரதிநிதிகள் மூலம் நீக்கம் செய்யும் அதிகா ரம் அரசியல மைப்புச் சட்டத் தில் உள்ளது.

ஆனால் ஆளுநர்களை நீக்கம் செய்ய வழியில்லை.

நியமனம் செய்தவர் களே திரும்பப் பெற வேண் டிய நிலை உள்ளது.

எனவே ஆளுநர் களை நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன் றத்திற்கு இருக்கும் வகையில் சட்டத் திருத் தம் செய்யக்கோரி தனி நபர் மசோதாவை நாடா ளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன்’’ என்றார்.

அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர மாவட்ட செய லர் கோ. தளபதி, மேனாள் மேயர் குழந்தைவேல், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் வேலுச் சாமி உள்ளிட்ட திமுக சட்டத் துறை நிர்வாகிகள், அரசு வழக்குரைஞர்கள் என, ஏராளமா னோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment