நமது மூத்த முதுகுடிமக்கள் ("Super Agers") அறிக! அறிக!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

நமது மூத்த முதுகுடிமக்கள் ("Super Agers") அறிக! அறிக!!

 நமது மூத்த முதுகுடிமக்கள் ("Super Agers") அறிக! அறிக!!

சுமார் 80 வயதுக்கு மேற்பட்ட முதுகுடி மக்களையே, மருத்துவ ஆய்வாளர்கள் 'மூத்த முதுகுடிமக்கள்' - 'Super Agers' என்ற ஒரு சொற்றொடர் மூலம் குறிக்கிறார்கள்.

80 வயதுடனும்,  அதற்கு மேலும் ஆன அனைவரையும் இந்த பகுப்பில் வைக்காமல், அவர்களுக்கு வேறு கூடுதல் தகுதியையும்கூட North- Western Researchers   நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் (அமெரிக்காவில்) நிர்ணயம் செய்து ஒரு புதுவகைப் பட்டியல் தயாரித்துள்ளார்கள்.

80 வயதிலும் மற்ற 50, 60 வயதுகளிலும் உள்ள வர்களுக்கு நினைவாற்றல் எப்படி இருக்குமோ அதே அளவு நிலையில் உள்ளவர்களையே  'மூத்த முது குடியினர்' என்று வகைப்படுத்தி அழைக்கலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய 'மூத்த முதுகுடியினர்' ஒவ்வொரு நாள் நிகழ்வையும் மீண்டும் நினைவுபடுத்திக் கூறும் ஆற்றல், தங்களது கடந்த கால சொந்த பிரச்சினைகளை எதிர் கொண்ட நிலவரம் - முறைபற்றி மீண்டும் பழைய நிகழ்வு பற்றிய நினைப்பை மீட்டுருவாக்கித் தரும் ஆற்றல்- இவைகளே அவர்களது தனித் தன்மையைக் காட்டுகின்றன. 

நினைவாற்றல் உறுப்புகள் தன்மைக்கான பரிசோதனைகள்   (Cognitive tests) ஆய்வாளர் டாக்டர் ரோகல்ஸ்கி அம்மையார் கூறுகிறார் (Cognitive neuro scientist  எமலி ரோகல்ஸ்கி என்பவர் மனோதத்துவ ரீதியான ஆய்வு மருத் துவத்துறை (Psychiatry and Behavioral Sciences at Feinberg School of Medicine) பேராசிரியர் இவர்):

இந்த 'மூத்த முதுகுடிமக்களுக்கான' ஆய்வுத் திட்டத்தை அங்கே அவர்தான் துவக்கினார் - மனு போட்டு சேர முயன்றவர்களில் பத்து சதவிகிதத் தினரே இதில் சேரும் தகுதி படைத்தவர்களாகி இணைந்தார்கள்!

இப்படி இவர்களைத் தரம் பிரித்து மூத்த குடிமக்கள் - 'சூப்பர் ஏஜெர்ஸ்' (Super Agers)  என்ற தேர்வு கொள்கையில், இவர்கள் அறிவுத் திறன் - சராசரி மனிதர்களின் அறிவுத்திறன் அளவில் சமத்துவ அளவு அடிப்படை உள்ளது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் இப்படி ஒருதனி வகையிலான ஆய்வு திட்டத்தை அப்பேராசிரியை ஏற்படுத்தினார்!

இதன் பிறகு மூன்று 'டி' வண்ண கலர் ஸ்கேன்கள் படங்கள் அவரின் மூளையில் பல பகுதிகளில் எடுக்கப்பட்டன. சில ஆண்டு தொடர் ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஸ்கேன் எடுத்து ஒப்பீட்டுடன் ஆய்வு செய்து,  அவர்களது தனித்திறன் அளவீட்டை கணக்கிட்டு மதிப்பீடு செய்கிறார்கள்!

மற்ற மூத்தகுடிமக்களில் பெரும்பாலோருக்கு மூன்று வகையான மறதி நோய்கள் முதுமையில் அவர்களைத் தாக்குகின்றன.

1. அல்ஷைமர்ஸ் (Alzheimer's disease) என்ற மறதி நோய் - இதை முதலில் கண்டறிந்த டாக்டரின் பெயரையே இந்த நோய்க்கு வைத்து விட்டார்கள்.

2. டிமென்ஷயா (Dementia) ஒருவகை மறதி நோய்.

3. அம்னீஷியா - (Amnesia) அரசியல்வாதிகள் பிறரைத் தாக்கும் போதுகூட - நாசுக்காக அவர் முன்பு கூறியதை மறந்து விட்டுப் பேசுகிறார் என்று ஏளனத்துடன் கூறுவதையே "அவருக்கு செலக்டீவ் அம்னீஷியா" என்று கூறுவதுண்டு.

இவைகளால் தாக்கப்படாமல் தங்கள் நினைவாற்றலைப் பெருக்கி காத்துக் கொள்ளு பவர்களே.  'Super Agers'  எனும் ஒரு வகை மூத்த முதுகுடிமக்கள் ஆவர்.

அது எப்படி இவர்களுக்கு மட்டும் சொந்தமாயிற்று? நாளை பார்ப்போமா?

(வளரும்)


No comments:

Post a Comment