இந்தியாவில் மேலும் 89 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

இந்தியாவில் மேலும் 89 பேருக்கு கரோனா பாதிப்பு

 புதுடில்லி, ஜன. 25- இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் தொற்று பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 

89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,931 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.06 - சதவிகிதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாகவும் உள்ளது. கரோனா மீட்பு விகிதம் 98.81 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்னிக்கை 220.30 கோடியாக உள்ளது.

தமிழ்நாட்டில் 10 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, ஜன, 25- தமிழ்நாட்டில் நேற்று (24.1.2023) 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அய்க்கிய அரபு அமீரகம், ஜார்ஜியா, குவைத்தில் இருந்து வந்த 3 பேர் உள்பட 10 பேருக்கு நேற்று (24.1.2023) கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னை, சிவகங்கை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 32 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment