புதுடில்லி, ஜன. 25- ஏர் இந்தியா விமானத்தில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பயணம் செய்த பெண் ஒருவரின் இருக்கையில் இருந்த போர்வை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இது, ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற 2ஆவது நிகழ்வாகும். முன்னதாக, நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்-டில்லி விமானத்தில் பெண் பயணியின் மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த நிகழ்வு பொது வெளியில் மிகப் பெரிய விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து, ஏர் இந்தியாவுக்குஅபராதம் விதிக்கப்பட்டதுடன், விமானியின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு சிறுநீர் கழிப்பு நிகழ்வு தொடர்பாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்ட பிறகே அது வெளிச் சத்துக்கு வந்தது. அதுவரையில், இந்த விவகாரம் குறித்து புகாரளிக்காமல் ஏர் இந்தியா மறைக்கும் நோக்கில் செயல் பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த நிகழ்வு குறித்து தெரிவிக்காமல் இருந்ததற்காக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment