சிவில் நீதிபதியாக 25 வயது இளம்பெண் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

சிவில் நீதிபதியாக 25 வயது இளம்பெண் தேர்வு

பெங்களுரு, ஜன. 19-  கருநாடக உயர்நீதிமன்றத்தின் சிவில் நீதிபதியாக 25 வயது இளம் பெண் தேர்வாகியுள்ளார்.

பெங்களூரு விதானசவுதா எதிரே கருநாடக உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த உயர்நீதிமன்றத்திற்கு சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு இணைய வழியாக நேரடித் தேர்வு நடை பெற்றது. இந்தத் தேர்வில் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி-வெங்கட லட்சுமி இணையரின் மகள் என்.காயத்திரி (வயது 25) கலந்து கொண்டார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பங்காரு பேட்டையை சேர்ந்த காயத்திரி தேர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இளம் வயதிலேயே சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள காயத்திரி, பங்காருபேட்டை அருகே காரஹள்ளியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தராய்யா சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்.

 அவர் பல்கலைக்கழக அளவில் 4ஆவது இடத்தை பிடித்து இருந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த காயத்திரி கடின உழைப்பால் இன்று சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment