நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும் மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும் மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடில்லி, டிச 17 நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. 

 நீதித்துறை நியமனங்கள் தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ  பதிலளித்தார். அப் போது அவர், நீதிபதிகள் நிய மனத்தில் ஒன்றிய அரசுக்கு குறைவான அதிகாரமே இருப்ப தாக தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:- 165 நீதிபதிகள் நியமனம் நாட்டின் உயர்நீதிமன்றங்களில் அனும திக்கப்பட்ட நீதிபதிகள் எண் ணிக்கை 1,108 ஆக உள்ள நிலையில், கடந்த 9-ஆம் தேதி நிலவரப்படி 777 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 331 இடங்கள் அதாவது 30 சதவீதம் காலியாக உள்ளன. இதை நிரப் புவதற்காக பல்வேறு உயர்நீதி மன்றங்களில் இருந்து பெறப் பட்ட 147 பரிந்துரைகள், அரசு மற்றும் உச்சநீதிமன்ற கொலீஜியம் இடையே பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. இந்த ஆண்டில் கடந்த 9-ஆம் தேதி வரை, சாதனை அளவாக 165 நீதிபதிகளை பல்வேறு உயர்நீதிமன்றங்களில் அரசு நியமித்துள்ளது. இது ஒரு ஆண்டில் நியமிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்காக கொலீஜியம் அனுப்பிய 20 பரிந்துரைகள் அரசால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன.  உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி களில், டிசம்பர் 5-ஆம் தேதி நிலவரப்படி 27 நீதிபதிகளே பணியில் உள்ளனர். 7 இடங்கள் காலியாக இருக்கின்றன. நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங் களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை தொட்டுவிட்டது. இவ்வளவு பெரிய அளவில் தேங்கியுள்ள வழக்குகளின் தாக் கம் பொதுமக்களிடம் தெளி வாகத் தெரிகிறது. ஆனால் இந்த வழக்குகளின் எண்ணிக் கையை குறைப்பதற்கு ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில், நீதிமன் றங்களின் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசிடம் குறை வான அதிகாரமே உள்ளது. கொலீஜியம் பரிந்துரைக்காத பெயர்களை அரசால் பரிசீலிக்க முடியாது. நீதிபதிகளின் காலியிடங்களை நிரப்புவதற்கான பெயர்களை விரைவில் அனுப் புமாறு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு வாய்மொழியாக வும் எழுத்து மூலமாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.  

நிலுவையில் உள்ள வழக் குகளை குறைக்க நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம். ஆனால் நீதிபதிகள் நியமனங் களுக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதிபதிகளின் காலியிடங்கள் மற்றும் நிய மனங்கள் இப்படியே தொட ரும். 

அது குறித்து கேள்விகள் தொடர்ந்து எழும். தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது தவறு என ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதித்துறை வல்லு நர்கள், வழக்குரைஞர் என பல தரப்பினரும் கூறியுள்ளனர் என்று கிரண் ரிஜிஜூ கூறினார்.


No comments:

Post a Comment