மலையை விழுங்கும் 'மகாதேவன்'கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

மலையை விழுங்கும் 'மகாதேவன்'கள்!

அழகர் கோவில் நிலத்தை விற்க முயற்சி - பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி  - கொடைக்கானல் பா.ஜ.க. தலைவர் கைது - விருதுநகர் காவல்துறையினர் அதிரடி.

அழகர்கோவில் நிலத்தை தங்களுடையது என்று கூறி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த கொடைக்கானல் நகர பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டார்.  

விருதுநகர் மாவட்டம், சூலக்கரையை சேர்ந்தவர் நல்லசாமி மனைவி ரங்கநாயகி. இவரது தம்பி சூரிய நாராயணன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தைக் கொண்டு விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை வாங்கி ரங்கநாயகி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

கொடைக்கானல் நகர பா.ஜ.க. தலைவர் சதீஷ்குமார் (37), இவரது தந்தை பத்மநாபன் மற்றும் உறவினர்கள் ரங்கநாயகியை அணுகி தங்களிடம் மதுரை வண்டியூர் பகுதியில் 12 ஏக்கர் 70 சென்ட் நிலம் உள்ளது என்றும், இதற்கான பவர் பத்திரம் பத்மநாதன் பெயரில் உள்ளது என்றும் கூறினர். பத்மநாதன் தன்னை ஓய்வு பெற்ற நீதிபதி என்றும் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் கூறியுள்ளார். பின்னர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஆறு பேரும் ரங்கநாயகியிடம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விலை பேசி அட்வான்ஸ் தொகை என ரூ.50 லட்சம் மற்றும் பத்திரப்பதிவுக்கு ரூ.20 லட்சம் பெற்றுள்ளனர்.

பின்னர் அந்த நிலத்தின் அசல் உரிமை தொடர்பாக அவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விவரம் கேட்ட போது   பா.ஜ.க. நிர்வாகி உள்ளிட்டோர் விற்பனை செய்வதாக கூறிய நிலம்  - மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமானது  என  ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. இதனை அடுத்து முன்பணமாக கொடுத்த ரூ. 70 லட்சம் பணத்தை திருப்பித் தரும்படி ரங்கநாயகி கேட்டுள்ளார்.

பணத்தைத் திருப்பித் தர மறுத்த பா.ஜ.க. நிர்வாகியின் தந்தையான பத்மநாபன் தான் ஓய்வுபெற்ற நீதிபதி என்று கூறி மிரட்டியுள்ளார்.  பணத்தைத் திருப்பித் தர மறுத்ததால் பத்மநாபன், சதீஷ்குமார், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் மீது ரங்கநாயகி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்ட புகாரில் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து 6  பேரும்  உயர்நீதிமன்றத்தில் முன்பிணை கோரினர். முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மதுரையில் பதுங்கியிருந்த பா.ஜ.க. நிர்வாகியான சதீஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த யோக்கிய சிகாமணிகள் தான் ஒழுக்கத்தைப் பற்றியும், ஊழலைப் பற்றியும் ஊளையிடுகின்றனர்.

கோயில் நிலத்தையே தங்கள் நிலம் என்று கூறிப் போலி ஆவணங்களைத் தயாரிக்கும்  இந்தக் கூட்டம்தான், கோயில்கள் அரசின் கையில் இருக்கக் கூடாது, ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர் - ஏன், நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர்.

அய்ம்பொன் சாமி சிலைகளுக்குப் பதிலாக போலி சிலைகளை வைத்து, அய்ம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்துவதில் கோயில் அர்ச்சகர்கள் சம்பந்தப்பட்டுள்ள செய்திகள் எல்லாம் ஏடுகளில் வெளிவந்து சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?

கோயில் முழுவதையுமே இவர்கள் கையில் ஒப்படைத்தால் அவ்வளவுதான், முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட்டு விட மாட்டார்களா?


No comments:

Post a Comment