கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கான மருத்துவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கான மருத்துவம்

சினைப்பை நீர்க்கட்டி (PCOD) பிரச்சினை ஹார் மோன் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்குரிய ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும், பெண்மைக்குரிய ஹார்மோன்கள் குறைவாக இருக்கும். இதனால் சினை முட்டை முதிர்ச்சி அடையா மல் நீர்க்கட்டிகளாக மாறு கின்றது. இதற்கு, குமரி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். அடுத்து, கருஞ்சீரகம், மர மஞ்சள், சதகுப்பை மூன் றையும் சமஅளவு எடுத்து பொடித்து ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு பனை வெல்லத்தில் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், கழற்சிக் காய் பொடி-500 மி.கி., மிளகுப் பொடி -200 மி.கி. சேர்த்து வெந்நீரில் காலை, இரவு சாப்பிட வேண்டும். நொறுக்குத் தீனிகள், எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். மனஅழுத்தம் இன்றி இருப்பது அவசியம்.


No comments:

Post a Comment