குஜராத்தில் 6,130, இமாச்சலப்பிரதேசத்தில் 1040 தேர்தல் விதிமுறை மீறல் அலைபேசி செயலியில் புகார்கள் குவிந்தன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

குஜராத்தில் 6,130, இமாச்சலப்பிரதேசத்தில் 1040 தேர்தல் விதிமுறை மீறல் அலைபேசி செயலியில் புகார்கள் குவிந்தன

புதுடில்லி,டிச.13- அண்மையில் நடந்து முடிந்த குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணை யத்தில் 7000 புகார்கள் பதிவா கியுள்ளன. சி விஜில் என்ற தேர்தல் ஆணைய செயலி யின் வாயிலாக பதிவான புகார்களுக்கு உரிய நடவ டிக்கை எடுத்துள்ளதாக தேர் தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.

இரு மாநில தேர்தல் தொடர்பாக 7000 புகார்கள் பதிவான நிலையில் இவற்றில் குஜராத்தில் இருந்து 6130 புகார்களும், இமாச்சல் பிரதே சத்தில் இருந்து 1040 புகார் களும் வந்துள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர் குஜராத்தில் பதிவான 6000 புகார்களில் 5100 புகார்கள் உண்மையானவை எனக் கண்டறியப்பட்டது. இவற்றில் பெரும்பாலனவை சுவரொட் டிகள் மற்றும் பதாகைகள் சர்ச்சைகள் நிமித்தமானது.

இமாச்சல் பிரதேசத்தைப் பொறுத்தவரை பெரும்பா லான புகார்கள் கங்க்ரா பகுதி யில் இருந்து பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக பிலாஸ்பூர், ஹமீர்பூர் தொகுதிகளில் பதி வாகி இருந்தன.இமாச்சலில் பதிவான புகார்களில் 75 சதவீத புகார்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்கப் பட்டது.

சிவிஜில் (நீக்ஷிமிநிமிலி) என்ற தேர்தல் ஆணைய செயலியில் இந்த புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த செய லியில் பதிவாகும் புகார்க ளுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment