தமிழ்நாடு மருத்துவத்துறையில் குரல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

தமிழ்நாடு மருத்துவத்துறையில் குரல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, டிச 15- தமிழ்நாடு மருத்துவத்துறையில் குரல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித்தார். 

மருத்துவர் எம்.கும ரேசன், கே.நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக் கட்டு மருத்துவம், கீச்சுக் குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட் டையில் உள்ள இந்தியன் அலுவலர்கள் சங்க வளா கத்தில் நேற்று  (14.12.2022) நடந்தது. 

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ அறிவியல் கழ கத்தலைவர் டாக்டர் கமலி சிறீபால் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் 

மா. சுப்பிரமணியன் புத்த கத்தை வெளியிட தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழ கத்தின் தலைவர் அய்.லியோனி பெற்றுக் கொண்டார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளி நாயகம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவின் தலைவர் பி.ஜோதிமணி, மருத்துவர்கள் சொக்க லிங்கம், கே.காந்தராஜ், தொழில் அதிபர் வி.ஜி.சந் தோசம், சென்னைவாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். குரல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

மருத்துவர் எம்.கும ரேசன் ஆதாரப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவர் 1,010 பேருக்கு குரல் சிகிச்சை மேற்கொண்டு, அவர்களின் மன நிலையை மாற்றம் செய்து இருக்கிறார். இந்தியா முழுவதும் மட்டுமல் லாது, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இவரி டம் சிகிச்சை பெற்று நலம் பெற்று இருக்கிறார்கள். 

இந்த சிகிச்சை முறையை வேறு யாருக்கும் கற்றுக் கொடுத்து இருக்கிறீர் களா? என்று மருத்து வரிடம் கேட்டேன். அவர் 2 பேருக்கு சொல்லி தந்து இருப்பதாக கூறினார். அவருடைய ஆற்றலை இன்னமும் பல நூறு பேருக்கு பயிற்றுவித்து இருக்க வேண்டும். 

விரைவில் முதல்-அமைச்சரிடம் இதுபற்றி தெரிவித்து, அவரைப் பயன்படுத்திக் கொள் வேன். மருத்துவர் குமரே சன் மூலம் பலர் பயிற்சி பெற வேண்டும். கீச்சுக் குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற எவ்வ ளவோ பேர் காத்திருக் கிறார்கள். 

அவர்களுக்கு எல் லாம் குரல் மாற்றத்தை ஏற்படுத்துகிற இந்த அரிய சிகிச்சை குறித்து இவர் மூலம் தமிழ்நாட் டின் மருத்துவத் துறை யில் சிறப்பு பிரிவை ஏற் படுத்தி ஏராளமான மருத் துவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment