சென்னை, டிச. 15, தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் நேற்று (14.12.2022) புதிதாக 4 ஆண்கள், 4 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திண்டுக்கல் உள்பட மொத்தம் 7 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 31 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இந்தியாவில்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,767- ஆக குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 663ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 3 பேர் (ஏற்கெனவே உயிரிழந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பு) கருநாடகாவில் ஒருவர் மற்றும் மராட்டிய மாநிலத்தில் ஒருவர் உயிரிழப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 98.80 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கரோனா தடுப்பூசிகள் எண்ணிக்கை 219.98 கோடியாக உள்ளது.
No comments:
Post a Comment