கலைஞர் விருது பெற்ற பிரசன்னா ராமசாமியின் சமூக விழிப்புணர்வு கொண்ட தமிழ் நாடகம் அரங்கேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

கலைஞர் விருது பெற்ற பிரசன்னா ராமசாமியின் சமூக விழிப்புணர்வு கொண்ட தமிழ் நாடகம் அரங்கேற்றம்

சென்னை,டிச.30- தமிழ்நாடு அரசின் கலைஞர் பொற்கிழி விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கி, சென்னை ஆர்ட் தியேட் டருடன் இணைந்து தயாரித் துள்ள அடுத்த தமிழ் நாடகம் ‘68,85,45 12 லட்சம்’.

இந்த நாடகம் பற்றி அவர் கூறியதாவது: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கையின் கூறுகள் வழிபாட்டுக்குரியவை என்று நம் சமூகம் வரை யறுத்துள்ளது. ஆனால், இவற்றை ஆதிக்க சக்திகள் சமத்துவத்துக்கு எதிரான, ஒடுக்குதலுக்கான கருவி களாக மாற்றிக் கொண்டிருக் கின்றன என்பதை, சமகால சரித்திர நிகழ்வுகளின் வழியாக நோக்கும் நாடகம் ‘68,85,45 12 லட்சம்’.

இயற்கைக் கூறுகளை வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுடன் தொடர் புடையவை இந்த எண்கள். உதாரணமாக, ‘68’ என்பது, கீழ்வெண்மணி படுகொலை நடந்த 1968-ஆம் ஆண்டு. அனைத்து உயிரினங்களுக் கும் பொதுவான இயற் கையின் கூறுகள் எப்படி ஒருசில சமூகங்களுக்கு எதி ராக பயன்படுத்தப்படு கின்றன என்பதை பேசுகிறது இந்த நாடகம். இவ்வாறு அவர் கூறினார்.

ப்ரஸன்னா ராமஸ்வாமி, ரத்தன் சந்திரசேகர், பத்தி ரிகையாளர் கவிதா முரளி தரன், எழுத்தாளர் கவுதம சன்னா, திவாகர் ஆகியோர் நாடகத்துக்கு எழுத்துப் பங்களிப்பை ஆற்றியுள் ளனர். சுகுமாரன், ஸ்வரூபா ராணியின் கவிதைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றரை மணி நேரம் நடை பெறும் இந்த நாடகத்தில் பரதநாட்டியக் கலைஞரும், நடிகருமான அனிதா ரத்னம், இயக்குநர் நிகிலா கேசவன், நடிகர்கள் ரேவதி குமார், பிரசன்னா ராம்குமார் ஆகி யோருடன், கூத்துப்பட்டறை நடிகர்கள், வேறு சில இளம் நடிகர்கள் என 18 நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனந்த் குமார் பிரத்யேகமாக இசையமைத்துள்ளார். வசனத்துக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நாடகத்தின் இசைக் குறிப்புகள் அமைக் கப்பட்டுள்ளதாக கூறுகிறார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.

‘68,85,45 12 லட்சம்’ நாடகம் சென்னை ஆழ் வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கத்தில் ஜன.7-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஒரு காட்சியும், ஜன.8-ஆம் தேதி மாலை 3 மணி மற்றும் இரவு 7 மணி என இரண்டு காட்சிகளுமாக அரங் கேற்றப்பட உள்ளது. நாட கத்தை காண்பதற்கான அனுமதிச் சீட்டுகளை ‘புக் மைஷோ’ (https://in.bookmyshow.com/plays/68-85-45-12-latcham/ET00347640)  இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment