அதிர்ச்சித் தகவல்: தாஜ்மகாலின் பொலிவைக்கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் மறைந்து வருகின்றன - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

அதிர்ச்சித் தகவல்: தாஜ்மகாலின் பொலிவைக்கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் மறைந்து வருகின்றன - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

புதுடில்லி, டிச. 13, உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஷாஜகான் அவருடைய மனைவி மும்தாஜ் மறைவை அடுத்து, நினைவு கூரும் விதமாக கட்டி உள்ளார். வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் உலகின் அதிக விலை உயர்ந்த பளிங்கு கற்கள் தாஜ்மகாலில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கற்களில் வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை.

இந்த கற்களானது சூரிய எதிரொளிப்பு தன்மையால் 3 வேளைகளிலும் வெவ்வேறு நிறங்களை பிரதிபலிக்க கூடியது. அதாவது காலையில் இளம் சிவப்பு நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும், இரவு நேரத்தில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் காட்சி அளிக்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் கிடைத்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தாஜ்மகாலின் பொலிவைக் கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் ஒவ்வொரு ஆண்டும் மறைந்து வருகின்றது என்ற அதிர்ச்சிச் தகவலும் வெளியாகி உள்ளது. தாஜ்மகாலை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள இந்திய தொல்லியல் துறை காணாமல் போகக்கூடிய கற்களுக்கு பதிலாக புதிய கற்களை பதித்து வரும் பணியை செய்து கொண்டிருக்கிறது. மேலும் கடந்த 7 ஆண்டுகளாக இதற்காக 2.5 கோடி அளவிற்கு நிதியை செலவிட்டு பல்வேறு பகுதிகளில் கற்களை நிறுவி வருகிறது எனவும் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் கல்லறை, ராயல் கேட் பகுதி, தாஜ்மகாலின் மாடம் போன்ற முக்கிய பகுதிகளில் இருந்தும் கற்கள் காணாமல் போயுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment