இனமானப் பேராசிரியருக்கு சிலை! சீற்றம் கொள்ளும் சின்னப் புத்திகளே!! சிறுமையாளர்களே இதற்கென்ன பதில்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

இனமானப் பேராசிரியருக்கு சிலை! சீற்றம் கொள்ளும் சின்னப் புத்திகளே!! சிறுமையாளர்களே இதற்கென்ன பதில்?

மறைந்த தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு கல்வித் துறை அலுவலகத்தில் சிலை அவசியமா?

- க. வெற்றிவேல், ராமநாதபுரம்,

இது ஒரு மோசமான முன்மாதிரி, இது தொடர்ந்தால் அனைத்து அமைச்சக அலுவலகங்களும் சிலைகளால் நிரம்பி வழியும். சிலை அமைப்பது என்று  முடிவு செய்தால் பல பெயர்கள் வரிசைப் பட்டியலில் வரலாம். (விஜயபாரதம் - 16.12.2022)

வயிறு எரியும் காவிகளே, பூணூல் பூசுரர்களே,

ஒவ்வொரு அரசு அலுவலகங் களிலும், ஏன் நீதிமன்ற வளா கங்கள் உள்பட, அனுமதியின்றி திடீர்க் கோயில்களை எழுப்பி, பெரிய வசூல் பணியை அன் றாடம் அறுவடை செய்கிறார்களே, அது பற்றி நீங்கள் எவராவது மூச்சு விட்டதுண்டா?

உயர்நீதிமன்றமும், உச்சநீதி மன்றமும், தீர்ப்புகள் - ஆணைகள் வழங்கிப் பல மாதங்கள் ஆகியும் அந்த அத்துமீறிய ஆக்கிரமிப்புக் 'கோயில்களை'  அகற்ற குரல் கொடுத்ததுண்டா?

அவ்வளவு ஏன்?

சென்னையில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் உ.வே.சா.வுக்கு சிலை வைத்துள்ளதை அகற்றிடச் சொல்வீரா? அது தவறான முன்மாதிரி என்று கூறியதுண்டா?

சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் சுப்ரமணிய அய்ய ருக்குச் சிலை - 'அமர்ந்த போஸில்' உள்ளதே அந்த 'முன் மாதிரி'கள் வசதியாக மறந்து விட்டதா?

அவாளுக்குச் சிலை என்றால் இனிக்கிறது, எங்கள் இனமானப் பேராசிரியருக்குச் சிலை என்றால் மட்டும் சீற்றமா?

'பேசு நா இரண்டுடையாய் போற்றி! போற்றி!!'

மனுநீதி ஆட்சியா இந்த மண்ணில் - இல்லை இல்லை திக்கெட்டும் புகழ் மணக்கும் 'திராவிட மாடல்' இது!

ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள விருப்ப மானால் ஊளையைத் தொட ருங்கள்.

- "மணியோசை"


No comments:

Post a Comment