நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேறியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேறியது

சென்னை, டிச.24 தமிழ்நாட்டில் குருவிக்காரர், நரிக்குறவர் உள் ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து ஜாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்று போராடி வருகின்றனர்.  இதுதொடர்பாக அரசுக்கும், முதல மைச்சருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியி ருந்தார். அதில், நரிக்குறவர், குரு விக்காரர் சமூகத்தினரை தமிழ் நாட்டின் பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்தி ருந்தார். 

இந்நிலையில் டில்லியில் பிர தமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14 ஆம் தேதி நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடி யினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட் டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங் கும், பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த வியாழக்கிழமை (15.12.2022) மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநிலங்கள வையில் நேற்றுமுன்தினம் (22.12.2022) இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. விவா தத்திற்குப் பிறகு மசோதா நிறை வேற்றப்பட்டது. 

இதையடுத்து குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும், அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment