புதுவை ஆளுநரின் பார்வைக்கு நல்ல தமிழ்ப் பெயர் வேண்டும் என்று கூறும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

புதுவை ஆளுநரின் பார்வைக்கு நல்ல தமிழ்ப் பெயர் வேண்டும் என்று கூறும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரே!

'திராவிட மாடலுக்கு பதிலாக நல்ல தமிழ் பெயர் வேண்டும்' என்று கூறும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அவர்களுக்கு, அவரின் மேற்பார்வையில் இயங்கும் புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் ஒரு நிகழ்ச்சி கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது 

அந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் 

'ஜன் ஜட்டிடா கவுரவ் திவாஸ் விழா' என்று இருந்தது, கட்டாயம் தமிழிசை அவர்களின் பார்வைக்கு இந்த அழைப்பிதழ் சென்று இருக்கும்,    ஹிந்திக்காரனுக்கும் இதில்  என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாது, தமிழில் படிப்பவர்களுக்கும் இதன் பொருள் விளங்காது, 

ஹிந்தியில் 'ஜனஜாதிய கவுரவ திவஸ்' என்று இருக்க வேண்டும் - தமிழில் 'மக்கள் சமூக உரிமை நாள் விழா' என்று இருக்க வேண்டும் - இரண்டுமே இல்லாமல்  'ஜனஜட்டியா கவ்ரவு திவாஸ்' என்று வந்திருக்கிறது. 

 இப்படி தமிழை கொலைசெய்து விட்டு இங்கு வந்து 'திராவிட மாடலுக்கு பதில் நல்ல தமிழ்பெயர் வேண்டும்' என்று சொல்கிறீர்களே?


No comments:

Post a Comment