கல்வி வளாகத்துக்கு அன்பழகனார் பெயர் சூட்டு விழா பேராசிரியர் க. அன்பழகனார் நூற்றாண்டு நினைவு வளைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

கல்வி வளாகத்துக்கு அன்பழகனார் பெயர் சூட்டு விழா பேராசிரியர் க. அன்பழகனார் நூற்றாண்டு நினைவு வளைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,டிச.19- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.12.2022) சென்னை, நுங்கம்பாக்கத் திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.அய். வளாகத்தில் நடைபெற்ற இனமானப் பேராசிரியர் க.அன்பழ கனார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், டி.பி.அய். வளாகத் திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் க.அன்பழகன் நூற் றாண்டு நினைவு வளைவினைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக் குப் பெரும் பங்காற்றியவரும், தலை சிறந்த கல்வியாளருமான இன மானப் பேராசிரியர் க. அன்பழக னார் அவர்களின்  நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.அய். வளா கத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் உருவச்சிலை நிறுவப் படுவதுடன் அவ்வளாகம் “பேரா சிரியர் அன்ப ழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும் என்று 30.11.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, பள்ளிக்கல்வித் துறை யின் டி.பி.அய். வளாகத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் 'பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்' என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர் பலகையினை திறந்து வைத்தார். மேலும், இனமானப் பேராசிரியர் க.அன்பழகனாரின் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.அய். வளாகத்தின் நுழைவு வாயில் எண் 2இல் கட்டப் பட்டுள்ள பேரா சிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினையும் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். 

பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவு மற்றும் பெயர் பலகை ஆகியவை 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள் ளது.     இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட  அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறை யன்பு, இனமானப்   பேராசிரியர் அவர்களின் குடும்பத்தினர், உள் ளாட்சி அமைப் புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண் டனர்.

விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment