'தினமலருக்கு' விளம்பரம் தரும் தி.மு.க.வினரின் சிந்தனைக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

'தினமலருக்கு' விளம்பரம் தரும் தி.மு.க.வினரின் சிந்தனைக்கு!

திராவிட இயக்கத்தையும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் 'திராவிட மாடல்' அரசினைக் கொச்சைப்படுத்தி, மிகக் கேவலமாகப் பொய்யும், புரட்டுமாக 'தினமலர்' எழுதி வருவதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

இன்றைய  'முரசொலி'யில்கூட தினமலருக் குப் பதிலடி கொடுத்துத் தலையங்கம் தீட்டப்பட் டுள்ளது. இந்த நிலையில்

அப்படிப்பட்ட திராவிட இயக்கத்துக்கும், நமது இனத்துக்கும் எதிராக நாளும் நாளும் நாசகாரமாக நாலாந்தர நிலையில் எழுதும் தினமலருக்குத் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்  - அமைச்சர்கள் உட்பட முழுப் பக்கம் விளம்பரங்களைக் கொடுப்பது - எந்த வகையில் கொள்கைப் பிடிப்பைச் சார்ந்தது - திராவிட இயக்க இனவுணர்வைச் சார்ந்தது - இது நமது சுயமரியாதைக்கு இழிவு அல்லவா!

மானமிகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்கும் இந்நாளில் தி.மு.க. முக்கிய தோழர்கள், பொறுப்பாளர்கள் 'தினமலருக்கு' விளம்பரங்களை அள்ளிக் கொடுத்துள்ள நிலையிலும் இன்றுகூட திமுகவைக் கேலியும், கிண்டலும் செய்து செய்தியை வெளியிடுகிறது.

"பொய்களால் கட்டமைக்கப்பட்டதே திராவிட இயக்கம்" என்று எட்டுப் பத்தி தலைப்பிட்டு மிகவும் கேவலமாக எழுதியுள்ளதே! 

('தினமலர்' - 10.12.2022 பக்.6)

இது கண்டு ஆத்திரம் வர வேண்டாமா? 'தமிழன் என்றால் மொழி உணர்வு இருக்கும் - திராவிடன் என்றால் ரோஷமும் கூடுதலாக இருக்கும்' என்ற இனமானப் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு - பிறந்த நாள் வரும் இந்தக் கால கட்டத்திலாவது தி.முக.. தோழர்கள் இனமானப் பேராசிரியர் கூறிய 'ரோஷம்' என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

தி.மு.க. - நீதிக்கட்சி  - சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் இவற்றின் நீட்சி- சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நடத்தும் "திராவிட மாடல்" ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்று அடையாளம் கூடத் தெரியாமல் திமுக பொறுப் பாளர்கள் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. 

இனி மேலாவது திருந்தினால் நல்லது.


- கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர்

 திராவிடர் கழகம்

சென்னை

14.12.2022


No comments:

Post a Comment