பெரியார் பெருந்தொண்டர் வெங்கடசமுத்திரம் வி.ஆர். வேங்கன் உடலுக்கு கழகத் தோழர்கள் மரியாதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

பெரியார் பெருந்தொண்டர் வெங்கடசமுத்திரம் வி.ஆர். வேங்கன் உடலுக்கு கழகத் தோழர்கள் மரியாதை!

தருமபுரி, டிச. 17- தருமபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் பெரியார் பெருந்தொண்டரும் மேனாள் ஒன்றிய பெருந்தலைவருமான வி.ஆர். வேங்கன் அவர்கள் 15.12.2022 அன்று மறைவுற்றார். 

அவருக்கு மாவட்ட கழகத் தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் பீம. தமிழ் பிரபா கரன் தலைமையில், கழகத்தின் சார்பில் மாநில அமைப்புச் செய லாளர் ஊமை. ஜெயராமன் மற் றும் கழக நிர்வாகிகள் மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மண்டல  தலைவர் அ.தமிழ்செல்வன், மாநில இளை ஞர் அணி துணை செயலாளர் மா.செல்லதுரை, சேலம் மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்  பழனி.புள்ளையண்ணன்,சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணி,மேட்டூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி,  தரு மபுரி பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், மாவட்ட தொழிலாள ரணி செயலாளர் இரா.சேட்டு, மாவட்ட பகுத்தறிவாளர்  கழக செயலாளர்  கதிர் செந்தில், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர்  தீ.சிவாஜி,  தரும புரி நகர தலைவர் கரு.பாலன், மேனாள் மாவட்ட தலைவர் 

மு. பரமசிவம், மாவட்ட இளை ஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன், மேனாள் மண்டல தலை வர் பழ.வெங்கடசலம், ஊறறங் கரை பகுத்தறிவாளர்களாக பொறுப்பாளர்கள் சித.அருள், சித. வீரமணி, கிருஷ்ணகிரி மாவட்ட  மேனாள் தலைவர்  கோ.திராவிட மணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர்  கு.தங்கராஜ் மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் கவிஞர்.கண்ணிமை, பூங்குன்றன், அசோகன், அசோக் குமார், திராவிடன், கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர்  பெ.அன்பழகன், பாப்பிரெட்டிப் பட்டி மேனாள் ஒன்றிய தலை வர் இளங்கோ,  இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர் கள் தென்றல் பிரியன், அய்ய னார், சக்திவேல், வருண், விக் னேஷ், வசந்தபிரியன், நல். இரா மச்சந்திரன், மற்றும் கழகத் தோழர்கள் உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் செலுத் தினர். 

வி. ஆர். வேங்கன் அவர்களின் மகன் தமிழ்ச்செல்வன், மற்றும் அவரது பேரன் இராஜவேங்கன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு  கழக தோழர்கள் ஆறுதல் கூறினர்.

திமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளரும் மேனாள்  உயர் கல்வித்துறை அமைச்சருமான பி. பழனியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், சரவணன், பேரூராட்சி மன்ற தலைவர்  செங்கல் மாரி,பேரூர் மன்ற கழக செயலாளர் ஜெயச் சந்திரன், மேனாள் ஒன்றிய செயலாளர் இராசு. தமிழ்ச்செல் வன், அ.தி.மு.க. சார்பில் மேனாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் முன்னாள் எம்.பி. அ.தீர்த்த ராமன், சி.பி.எம். சார்பில் சங்கு, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். 

அதைத்தொடர்ந்து கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் தலைமை யில் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. 

கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன், அண்ணா தி.மு.க. சார்பில் மேலா ளர் அமைச்சர் வ. முல்லை வேந்தன், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன், காங்கிரஸ் கட்சி யின்  மாவட்ட செயலாளர் அ.தீர்த் தராமன்  ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர். 

இரங்கல் கூட்டத்தை மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி ஒருங்கிணைத்து நடத்தினார்.  

கழகக் கொடி உடல் மீது போர்த்தப்பட்ட நிலையில் கழகத் தோழர்கள் வீரவணக்கம் முழக்கமிட்டு உடலை சுமந்து சென்று எவ்வித மூட, மதச் சடங்குமின்றி    எளிய முறையில் அடக்கம் செய்தனர். வி.ஆர். வேங்கன் அவர்களின் மறைவை யொட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கல் வீரவணக்க அறிக்கை அனைவருக்கும் அச்சிட்டு வழங்கப்பட்டது. 

அதேபோல பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் துண்ட றிக்கை விநியோகிக்கப்பட்டது.  பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அனைத்து கட்சியினர் என ஏரா ளமானோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment