திண்டுக்கல் (24.12.2022) சென்றிருந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவரிடம், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு 3 பார்ப்பனர்களால். முடக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்; தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதனை வலியுறுத்த வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் நினைவு சூளுரையாகும்" என்று கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி மாநிலங்களவையில் கார்த்தி கேய சர்மா என்ற உறுப்பினர் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்,
"இராமர் பாலம் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் பழங் கால இராமர் பாலம் இருந்ததாகக் கூறப்படும் பிராந்தியத்தின் செயற்கைக் கோள்கள் படங்கள். தீவுகள். சுண்ணாம்புக் கற்கள் கைப்பற்றியுள்ளன. அவை ஒரு பாலத்தின் எச்சங்கள் எனத் துல்லியமாகக் கூறமுடியாது என்று பதிலளித்துள்ளார்.
"மேலும், வரலாறு 18.000 ஆண்டுகளுக்கு மேலானது என்பதானும், பாலம் 56 கி.மீ. கொண் டது என்பதாலும், அங்கு பாலம் இருந்ததற்கான சரியான கட்டமைப்பைக் கூறமுடியாது" எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இவ்வாறான செய்தியைக் கொண்டுதான். ஆசிரியர் வீரமணி அய்யா, உடனடியாக சேது கால்வாய் சமுத்திரத் திட்டத்தைத் தொடங்கிட அனைத்துக் கட்சிகள் ஒன் றிணைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியசாமி சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறை வேற்றுவது தொடர்பான வழக்கில். அதிக்கால அவ காசம் அளித்தும் ஒன்றிய அரசு முடிவு எடுத்து அறி விக்கவில்லை என்று சுப்பிரமணியன் சாமி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. இதையடுத்து ராமர் பாலத்தை இடிக்காமல். சேது சமுத்திரத் திட் டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுத்து 6 வார காலத்துக்குள் உச்ச நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு 13.11.2017இல் உச்சநீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஜெயலலிதா வின் அ.தி.மு.க. அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டிருந்த பிரமாண வாக்கு மூலத்தினைத் திரும்பப் பெறக்கோரியும், மேலும் தாமதம் செய்யாமல் சேது சமுத் திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தியும். கழகத்தின் சார்பில் 2013 ஜூலை 8 அன்று மாபெரும் அறப்போராட்டம் நடை பெற்றது.
ஏற்கெனவே தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் 'எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள் நடத்திட முடிவு செய்து மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் 2013 மே15 ஆம் நாள் நடைபெற்றது. இந்த எழுச்சி நாள் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் வடசென்னையில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதைப்போன்று கழக செயல் தலைவராக இருந்த தளபதி மு.க. ஸ்டாலின் மற்றும் கழக முன்னோடிகள் தமிழக மெங்கும் நடைபெற்ற எழுச்சி நாள் கூட்டத்தில் பங்கேற்று சேது சமுத்திரத் திட்டம் குறித்தும், ஜெயலலிதாவின் இரட்டை வேடம் குறித்தும் பரப்புரை ஆற்றினர். மேலும் தலைவர் கலைஞர் முரசொலியில் தொடர்ந்து எழுதி வந்தார். கலைஞரின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு. தென் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கலைஞர். தனது உரையில் இடையே சேது சமுத்திரத் திட்டத் தைக் குறித்து பேசிய போது, "இராமர் திட்டம்” என்று கூட வைத்துக் கொள் ளுங்கள் அதைப் பற்றி எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் சேது சமுத்திரத் திட்டத்தை மட்டும் முடக்கி விடாதீர்கள்" என்று குறிப்பிட்டுப் பேசினார்.
தமிழ்நாட்டிற்கு வளமும் நலமும் தரக்கூடிய திட்டமே சேது சமுத்திரத்திட்டம். ஆனால், ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று கூறியது. இதனைக் கண்டித் துக் கழகத்தலைவர் கலைஞர் அவர்கள் கண்டன அறிக்கை வெளி யிட்டார்.
தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வந்த ஜெயலலிதா, அப்போது சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை ஏற்படுத்தினார். ஏற்கெனவே சுப்பிர மணியன் சாமியும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துத் தடையேற்படுத்தினார்.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய திராவிட இயக்கத் தலைவர்கள் தொடர்ந்து இந்தத்திட்டத்திற்காகக் குரல் எழுப்பி வந்தனர். காங்கிரஸ். கம்யூனிஸ்ட் போன்ற மற்ற கட்சிகளும் இதற்குத் ஆதரவு தெரிவித்து வலியுறுத்தி வந்தன. சேது சமுத்திரத் திட் டத்திற்கான பணிகளில் தி.மு. கழகம் மகத்தான சாதனை புரிந்து வந்துள்ளது. கழகம் தோன்றிய நாள் முதலாய் நடந்துள்ள மாநாடுகள், பொதுக் குழு. செயற்குழு. உயர்நிலைச் செயல் திட்டக்குழு கூட்டம் எனப்பல்வேறு கூட்டங்களில் அந்தத் திட்டத்தை வலி யுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், இதற்கான குரல் எழுப்பப்பட்டுத் தமிழ்நாடு நலன் மட்டும் மல் லாது இந்திய நாட்டின் தொழில் மேம்பாட்டிற்கும். பொருளாதார வளர்ச்சிக்கும் கடல்வழிப்போக்கு வரத்திற்கும் உதவக்கூடிய சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட் டது. மேலும் கழக தோதல் அறிக்கைகளிலும் இது முக்கியக் கோரிக்கையாக இணைக்கப்பட்டு வெளி யிடப்பட்டது.
சேது சமுத்திரத்திட்டத்திற்காக எழுச்சி நாள் கொண் டாடும்படி 1967 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள், அறை கூவல் விடுத்து, அனைவரின் ஈர்த்ததுடன் அதற்கான ஆக் கப்பணிகளைச் கவனத்தையும் செய்யக் கூறினார்.
தென் அமெரிக்கா. வட அமெரிக்க நாடுகளுக்கி டையில் நிலத்தில் வெட்டப்பட்டதே "பனாமா கால்வாய்", அதைப் போல் எகிப்துக்கும். அய்ரோப்பாவிற்கும் இடையில் நிலத் தில் வெட்டப்பட்டதே 'சூயஸ் கால்வாய். இவ்விரு கால்வாய் களும் தொழில் நுட்பம். அறிவியல் வளர்ச்சியில்லாத அந்தகாலத்தில் உருவாக்கப்பட்டன என்றாலும், இவற்றால் அந்நாடுகள் அளவற்ற வளர்ச்சியடைந்துள்ளன. சேதுக்கால் வாய் போன்றே இக்கால்வாய்கள் நீளமும், அகலமும் உடையன.
ஆனால். இவ்விரு கால்வாய்கள் நிலத்தில் வெட்டப் பட்டன. இந்தியாவுக்குச் சொந்தமான சேது கால்வாய் மூலம் கடற்பரப்பில் பாம்பனுக்கு அருகில் 'ஆதம் பாலம்' எனப்படும். மணல் திட்டுகளை 12மீட்டர் ஆழப்படுத்திக் கப்பல்களை இயக்கிடத் திட்ட மிடப்பட்டது.
இந்திய நாட்டில் நர்மதா திட்டம்' தொடங்கும் முன் இதுபோன்ற சிக்கல்களை சிலர் உருவாக்கி உச்சநீதி மன்றம் வரை சென்றனர். உண்ணாநிலை போராட்டம். மறியல் எனப் பல தடைகளைத் தாண்டி, இன்று அத்திட்டம் நிறைவேற்றப்பட்டதால் குஜராத். மத்திய பிரதேச மாநில மக்கள் பெரும்பயன்பாடு அடைந்து வருகின்றனர்.
சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டம் என்பது 1860 ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிற நலத்திட்டமாகும்.
(1) 1860 கமாண்டர் ஏடி.டெய்லர் திட்டம். (2) 1861 டௌன்சண்ட் தயாரித்ததிட்டம். (3) 1862 எல்ஃ பின்ஸ்டன் வேண்டுகோளால் உருவான இங்கிலாந்து நாடாளுமன்றத் திற்கு தந்த ஆய்வு அறிக்கை. (4) 1863 சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் டென் சன் தந்த ஆய்வு அறிக்கை. (5) 1871 ஜான் ஸ்டோர் டாட் தந்த ஆய்வு அறிக்கை. (6) 1872 பொறியாளர் ஜார்ஜ் இரபெர்ட்ஸ்டன் தந்த ஆய்வறிக்கை. (7) 1884 ஜான்கோட் உதவியுடன் சவுத்இண்டியன் ஷிப் கோனால் அண்டு கோடிங் ஸ்டேசன் நிறுவனம் திட்டம். (8) 1902 சவுத் இண்டியன் இரயில்வே கம்பெனியின் திட்ட அறிக்கை. (9) 1922 பொறியாளர் இராபர்ட் பிரிஸ்டோ தந்த ஆய்வறிக்கை (இது நீதிக் கட்சிஆட்சியில்).
1954 ஆம் ஆண்டு டிசம்பரில் சர்.ஏ. இராமசாமி முதலியார் தலைமையில் சேது சமுத்திரத் திட்டக் குழூவை நடுவணரசு அமைத்தது. இக்குழுச் செயலாளராக ஆர்.ஏ. கோபாலகிருஷ்ணன் அவர்கள் நியமிக்கப்பட்டார். இக்குழு சேதுத் திட்டம் குறித்து மிக நுணுக்கமாக ஆய்வு செய்தது.
1955 ஆம் ஆண்டு இக்குழு செயல்பட ஆரம்பித்தது. இதற்கு முன் எட்டுக்குழுக்கள் நியமனம் நியமனம் செய்யப்பட்டன என்றாலும், இராமசாமி குழுவில் பி.என்.சாட்டர்ஜி என்ற அறிகுரும், ஜே.ஆர். டேவிஸ் என்ற கடல், கடல் போக்குவரத்துத்துறை யின் இந்திய அரசின் ஆலோ சகரும் இடம் பெற்றுச் செயல் வடிவம் தர ஏற்பாடு நடை பெற்றது. கடல் நீர்ப் பரப்பு நீரோட்டத்தை ஒலி சோதனை மூலமாக ஆய்வு செய்த பின்னர்தான் இத்திட்டம் சாத்தியம் எனக் கூறப்பட்டது.
இக்குழு அளித்த பரிந்துரையில். குறிப்பாக ..... "தூத்துக் குடியிலிருந்து சென்னைக்கு வர வேண்டுமானால், இலங் கையைச் சுற்றி வர 750 கடல் மைல் தூரம் ஆகும். ஆனால் கால்வாய் வெட்டப்பட்டால் 314 கடல் மைல்தூரம் மட்டுமே ஆகும். இதனால் கப்பல் பயணத்தில் 44 விழுக்காடு நேரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும்.
மேலும், மும்பையிலிருந்த கல்கத்தாவுக்கு தூத் துக்குடி வழியாகச் சென்றால் 26 விழுக்காடு கடல் மைல் தூரம் மிச்சமாகும். தூத்துக்குடியிலிருந்து கல் கத்தா செல்ல 16 விழுக்காடு கடல்மைல் தூரம் அதா வது ஒன்றரை நாள் மிச்சமாகும்...." என்று சர்.ஏ. இராமசாமி குழு ஆய்வு அறிக்கை தெரிவித்தது.
1963 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றுவதுடன், சேது சமுத்திரத் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டு. ஒன்றோடு ஒன்று இணைந்த திட்டங்களாக அறிவிக்கப்பட்டன. எனினும் அவ்வாண்டு தூத்துக்குடி துறைமுகத் திட்டம் மட்டும் தொடங்கி வைக் கப்பட்டது.
ஆகவே, 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி. நடுவணரசு அமைச்சரவையில் இத்திட் டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் முடிவிற்கேற்ப துரித நடவடிக் கைப் பட்டியலில் சேர்த்து. 1964இல் இத்திட்டம் குறித்த ஆய்வறிக்கை தயாரிக்க ஒன்றிய போக்குவரத்துத் துறைச் செயலர் டாக்டர் நாகேந்திரசிங், அய்.சி.எஸ். தலைமையில் மேல்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
1965 மே முதல் ஆய்வைத் தொடங்கிய அக்குழு. தமது அறிக்கையை 1968 இல் நடுவணரசுக்கு அளித்தது. அதனையொட்டி சேது சமுத்திரத் திட்டம் நான்காவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் இடம் பெற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது. இராமசாமி முதலியார் குழு தயாரித்த மதிப்பீடு ரூ.8.18 கோடி. ஆனால் 1968 நாகேந்திரசிங் குழு திட்ட மதிப்பீடு ரூ. 37.46 கோடியாகும். ஆனால், இத்திட்டம் அந்நாளிலிருந்து கிடப்பில் போடப்பட்டு வந்தது.
1967 ஆம் ஆண்டு இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற ‘இந்திய தொழில் வர்த்தக சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி முன்னேற்றகரமான தமிழகம் கழகம் சேது எனும் துண்டு வெளியீடுகளை வெளியிட்டது. திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா போன்றோர் போராடி வந்தநிலையில் இப் போராட்டம் பெரிதாக உருவெடுத்தது.
மேலும், 1957 முதல் 1967 வரை எதிர்க்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க தலைவர் அண்ணாவும். கலைஞரும், திமுக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப் பினர்களும் சேது சமுத்திரத்திட்டத்திற்காக குரல் எழுப்பி வலியுறுத்தி வந்தனர். தி.மு.க. 1967 இல் ஆளுங்கட்சி ஆனவுடன் அண்ணா அவர்கள் எழுச்சி நாள் கொண்டாட ஆணையிட்டார்.
தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில். திருச் செந்தூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் களான டி.டி.கிருஷ்ணமாச்சாரி. கே.டி.கோசல்ராம ஆகி யோர் இத்திட்டத்திற்கு உறுதுணையாக நின்றார்கள். 1963 ஆம் ஆண்டு தூத் துக்குடி துறைமுகத்திட்டம் மட்டும் தொடங்கி வைக்கப்பட்டது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கலைஞர் முதல மைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் இது குறித்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நடுவணரசை வலியுறுத் தினார். 1981 ஆம் ஆண்டு சேது சமுத்திரத்திட்டம் பற்றி ஆராயக் கப்பல் போக்குவரத்துத்துறை ஆலோசகர் ஹெச்.ஆர்.லட்சுமிநாராயணன் தலைமையில் நடுவணரசு ஒரு குழு அமைத்தது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரின் கோரிக் கைக்கிணங்க அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. ஆர். அக்குழுவிடம் சேது சமுத்திரத்திட்டம் குறித்துப் பேசினார். மேலும், மதுரை, நெல்லைக்கு வந்த அக் குழுவிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் கழக நாடாளுமன்ற உறுப்பினர் முர சொலி மாறன் ஆகியோரின் அறிவுரையின்படி மாநிலங்க ளவை உறுப்பினராக இருந்த கழகத்தைச் சார்ந்த வை.கோபால்சாமி (வைகோ) அவர்கள் 1981 ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அன்று தூத்துக்குடியில் அக்குழுத் தலைவரைச் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினார்.
அதைப்போல் லட்சுமிநாராயண் குழுவிடம் கம்யூ னிஸ்ட் கட்சித்தலைவர் எம்.கல்யாணசுந்தரம். மார்க் சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களும், பழ.நெடுமாறன் போன்றோர்களும், மற்ற கட்சியினரும், பொது மக்களும் கோரிக்கை மனுக்கள் அளித்து சேது சமுத்திரத்திட்டத்தை வலியுறுத்தினர்.
நாடாளுமன்றத்தில் முரசொலி மாறன் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் இத்திட்டத்தை வலியுறுத்திச் சங்க நாதம் எழுப்பி வந்தனர். அன்றைய நடுவணரசின் அமைச்சர் இராஜேஸ் பைலட் இத்திட்டத்தை ஏற்க வேண்டி விளக்க வுரை நிகழ்த்திய வரலாறு முண்டு.
சேது சமுத்திரத்திட்டத்திற்கு இணைப்பு முகவராக (Nodal Agency) 1996 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறை முகக் கழகம் நியமிக்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் திட்டச்சுற்றுச் சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தை (National Environmental Engineering Research Insititute) (NEERI) நியமனம் செய்யப்பட்டது.
கால்வாய் தோண்டுவதற்கு 5 மாற்றுப்பாதைகளை இந்த 'நீரி நிறுவனம் பரிசீலித்ததில், பாதை எண் 1,2,3 தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்டன. 4,5 ஆகிய வழித்தடங்களை ஆய்வு செய்து துறை முகங்கள் கழக ஆலோசகர் அவர்களின் தலைமை யில் செயல்பட்டு வந்த வழிகாட்டுக்குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் 4 ஆவது வழித்தடத்தைப் பரிந்துரை செய்தது. சுற்றுச் சூழல், புவியியல். கடலி யல் உள்ளீட்ட பல்வேறு கூறுகளின் அடிப்படையில் சிறந்ததாகப் பாதை எண்.4 தேர்வு செய்யப்பட்டது.
1999 ஏப்ரல் மாதத்தில் சுற்றுச்சூழல். வளங்கள் துறை அமைச்சகம் தெரிவித்த கருத்தினையொட்டி, திட்டச்சாத்திய கூறுகள். ஆய்வுகள். விளைவுகள் மதிப்பீடுகள் கண்டறிந்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் கட்சிகளில் ஒன்றான பா.ஜ.க. நடுவணரசின் பொறுப்பிலிருந்த போது, தரைவழி ஆய்வுகளை மேற்கொள்ள தரை வழிப் போக் குவரத்துத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி 09.03.2001 அன்று ஒப்புதல் அளித்தார்.
2001 அக்டோபரில் 'நீரி' நிறுவனத்திடம் ஆய்வுப் பொறுப்பை ஒப்படைக்கப்பட்டதுடன். சேது சமுத்திரத் திட்டத்தின் ‘தீவிர சுற்றுச் சூழல் மதிப்பீடு விளைவு (Rapid Environmental Impad Assesment) குறித்து ஆய்வு முன்னேற்ற அறிக்கை 2002 ஆம் ஆண்டு அக்டோபரில் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டது.
அக்டோபர் 2002 இல் தேசிய ஜனநாயகக் கூட்ட ணியின் அரசின் பாரதீய ஜனதா கட்சியின் கப்பல் துறை அமைச்சர் வி.பி.கோயல் அவர்களிடம் "நீரி" நிறுவனம் தனது அறிக்கையை அளித்தது.
அப்போது பாரதீய ஜனதா ஆட்சியில் இணை அமைச்சராக இருந்த சு.திருநாவுக்கரசர் கூட்டிய ஆய்வுக் கூட்டத்தில்தான் 'நீரி' நிறுவன அறிக்கை சுட்டிக்காட்டிய 'ஆதம்ஸ் பிரிட்ஜ்' பாலத்தை வெட்டிச் செல்லும் 6 ஆம் வழித்தடம் தான் சுற்றுச் சூழல் உயிர் சார் இயற்கை வளம் மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறப்பானது என்று முடிவு செய்யப்பட்டது.
டாக்டர் முரளி மனோகர் ஜோஷியால் இராமேசுவரம் தீவுவழியாக சேது சமுத்திரக் கால்வாய் அகழ்வில் பணிகள் வசதிகள் 4.5 க்கு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவிக்காததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
மன்னார் வளைகுடா தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து இந்தக்கால்வாய் தொடங்கப்பட்டு, கிழக்கு நோக்கியும், பின் தெற்கு நோக்கியும் பின் ஆதாம் பாலத்தின் குறுக்காகவும், வெட்டப்பட்டு வங் காளா விரிகுடா பகுதி கால்வாயுடன் (International Medial Line) இணையாகச் செல்ல ஏற்பாடு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இந்தக் கால்வாய் அமையும் வழி. விரிவான வழி முறைகள் இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த வாஜ்பாய் அவர்கள். தலைமையிலான பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி அர சால் பரிசீலிக்கப்பட்டுத் தற்போதைய 6 ஆம் எண் பாதை முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டம் ஒப்புதல் வழங்கப்பட்டபோது 'இராமர் பாலம்' என்று அன்று பா.ஜ.க.வும் கூறவில்லை. ஏன், ஜெயலலிதாவும் அ.தி.மு.கவும் கூறவில்லை. மேலும், சேது சமுத்திரத்திட்டம் அனுமதி வழங் கப்பட்டது குறித்து பொது மக்களிடம் 2004 செப்டம் பர் முதல் 2005 பிப்ரவரி வரை 6 கடலோர மாவட்டங்களில் 3.சுற்றுக்களாக 14 இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டுக் கருத்தறியப் பட்டதில், யாரும் இராமர் பாலம்' என்ற சொற்றொடரை உச்சரிக்கவில்லை. 31.03.2005 அன்று ஒன்றிய சுற்றுச்சூழல் மற் றும் வனங்கள் துறை அமைச்சகம் எல்லாவிதமான ஆய்வுகளுக்குப் பிறகுதான் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாய்வுகளில் கடல்பரப்புகளில் மனிதன் உருவாக் கிய கட்டுமான அமைப்பு ஏதுமில்லை. தொல்லியல் ஆய்வு கூறும் அறிவியல் ஆதாரமும் இல்லை. இதனால் பா.ஜ.க. அரசு இப்பகுதியைத் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கவில்லை.
கழிவுப் பொருட்கள், எண்ணெய் கசிவுகள் பவளப் பாறைகளைத் தாக்கும் வாய்ப்பும் சிறிதும் ஏற்பட வாய்ப் பில்லை என்பதால், கடல் வழிப்பாதை செல் லும் இந்தியக் கடல் வணிகச்சட்டநெறிமுறைகளுக்கு உட்பட்டே திட்டம் செயல்பட கப்பல்கள் குறித்த பன்னாட்டுச் சட்டங்கள், அனுமதிக்கப்பட்டது. சேது சமுத்திரத்திட்டத்தின் மொத்த மதிப்பீடுகள் ரூ.2427 கோடி ரூபாயாகும்.
அரசின் மூலதனம் 495 கோடி ரூபாய், இந்தியக் கப்பல் கழகம் 50 கோடி ரூபாய். தூத்துக்குடி துறை முகம் 50 கோடி ரூபாய், இந்திய தூர் வாரிக்கழகம் 30 கோடி ரூபாய், எண்ணூர் துறைமுகம் 30 கோடி ரூபாய், பாரதீப் துறைமுகம் 30 கோடி ரூபாய். சென்னை துறைமுகம் 30 கோடி ரூபாய், விசாகப் பட்டினம் துறைமுகம் 30 கோடி ரூபாய், பொது மக் கள் பங்கு 226 கோடி ரூபாய். அரசு உத்தரவாதக் கடன் தொகை 1456 கோடி ரூபாய், ஆகமொத்தம் 2.427 கோடி ரூபாய். முழுமையாக திட்டம் தொடங்க அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியில் 2005 மே 19 இல் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தொடரும்
நன்றி: ‘முரசொலி‘, 28.12.2022

No comments:
Post a Comment