இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு கடினமாக இருக்கும் ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு கடினமாக இருக்கும் ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

புதுடில்லி,டிச.16- இந்திய ஒற் றுமை நடைப்பயணத்தில் ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நேற்று முன்தினம் (14.12.2022) கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். 

அவர் ராகுல் காந்தியுடன் உரையாடல் நடத்தினார். அப் போது இந்தியப் பொருளாதாரம் குறித்து இருவரும் உரையாடினர். 

இந்திய பொருளாதாரம் குறித்து ரகுராம் ராஜன் கூறு கையில் "முக்கியமான வட்டி விகிதங்களின் உயர்வு, ஏற்று மதிகள் குறைந்து வரும் நிலையில். அடுத்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியை எட்டுவதற்கு மிகவும் சிரமப்படும்.

அடுத்த ஆண்டில் நாம் 5 சதவீத வளர்ச்சியை அடைந்தால், அது நமது வளர்ச்சியை எந்த மதிப்பீட்டில் அளவிடுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண் டும். கடந்த ஆண்டு மோசமான காலாண்டை கொண்டிருந்தது. அதன் மதிப்பில் வளர்ச்சியைக் கணக்கிட்டால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாகவே தெரி யும். குறிப்பாக, கரோனா பெருந்தொற்றுக்கு முன்னர் 2019-ஆம் ஆண்டையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படியே அதனை தலைகீழாக 2022ஆம் ஆண்டு டன் ஒப்பிட்டீர்கள் என்றால் ஆண்டுக்கு 2 சதவீதம் வளர்ச் சியாக இருக்கும். ஆனால், அது நமக்கு மிகவும் குறைவு.

மந்தமான வளர்ச்சிக்குக் காரணம், கரோனா பெருந் தொற்றும் ஒரு பகுதியாக இருக் கிறது. பெருந்தொற்று ஊரடங் கிற்கு முன்னர் இந்தியா மந்தமாக வளர்ந்து வந்தது. வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களைச் செய்ய நாம் தவறி விட்டோம்.

தற்போது பொருளாதார ஏற் றத்தாழ்வு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மத்திய மேல்வர்க்கத்தினர் வீட்டில் இருந்தபடி வேலை செய்ததால் அவர்களின் வருமானம் உயர்ந் தது. ஆனால் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தவர்கள் தங்களின் வருமானத்தினை இழந்தனர். இதனால் ஊரடங்கு காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்தது. வசதி படைத்தவர்களுக்கு சிக்கல் இல்லை. கீழ்வர்க்கத்தினருக்கு ரேசன் மற்றும் பிற பொருள்கள் கிடைத்தன. ஆனால், கீழ் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப் புக்குள்ளானார்கள். பலர் வேலையிழந்தனர். வேலையில்லா திண் டாட்டம் அதிகரித்தது. திட்டங் களை வகுப்பவர்கள் இந்த வர்க் கத்தினரை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று ரிசர்வ் வங்கி யின் மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment