தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், 28.12.2022 அன்று காலையில், சென்னை - அண்ணா அறிவாலயம் - "கலைஞர் அரங்கில்' நடைபெற்ற - தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சரை செம்மொழி இதழாசிரியர் சிங்கப்பூர் எம். இலியாஸ் சந்தித்தார். அப்போது, கடந்த 17-12-2022 அன்று திருப் பத்தூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வெளியிடப்பட்ட, சிங்கப்பூர் எம். இலியாஸ் தொகுத்த "சிங்கப்பூரில் தமிழர் தலைவர் (தொகுதி 2) மற்றும் அவரது "தமிழவேள் பற்றி" ஆகிய இரு நூல்களையும் முதலமைச்சரிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார்.
(28-12-2022)

No comments:
Post a Comment