இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடுவது பி.ஜே.பி. உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தானே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடுவது பி.ஜே.பி. உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தானே!

ஏமாந்த தமிழனே, விபீஷணர்களே எண்ணிப் பாரீர்!

கம்பம் திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் கர்ச்சனை

கம்பம், டிச.30 இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடுவது பி.ஜே.பி. உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தானே! ஏமாந்த தமிழனே, விபீஷணர்களே எண்ணிப் பாரீர்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கம்பம் முப்பெரும் விழா

கடந்த 24.12.2022  மாலை கம்பத்தில்  நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கொள்கை விளக்க திறந்த வெளி மாநாடு

நீண்ட நாள்களுக்குப் பிறகு உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஓர் அருமையான ஏற்பாட்டை, கம்பம் மாவட்ட திராவிடர் கழகம் செய்துள்ளது. அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் - சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை ஜனநாயக முற்போக்குக் கொள்கை விளக்க திறந்தவெளி மாநாட்டில் வெள் ளம்போல் திரண்டிருக்கக்கூடிய அனைத்துப் பெரு மக்களே,

இந்நிகழ்விற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மானமிகு டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனம் அவர்களே,

வரவேற்புரையாற்றிய கம்பம் மாவட்டத் தலைவர் மானமிகு தமிழ்ச்செல்வன் அவர்களே,

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் 

அய்யா போடி இரகுநாகநாதன்

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய தேனி மாவட்டத் தலைவரும், நீண்ட கால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக் காரரும் ஆவார். போடி இரகுநாகநாதன் - அறிவாசான் தந்தை பெரியார் காலத்தில் இந்தப் பக்கத்தில் அதிகமாக இயக்கம் தவழ்ந்ததில்லை; அந்தக் குறைபாடு அவர் களுக்கே இருந்தது. ஒருமுறை இங்கே நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அய்யா அவர்க ளோடு பேசினோம். அதற்குப் பிறகு இங்கே நம்முடைய இயக்கம் வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், அதற்கு நம்முடைய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா போடி இரகுநாக நாதன் போன்றவர்களுடைய அரிய உழைப்புதான் காரணம். இன்றைக்குச் சிறப்பாக இருக்கின்ற நிலைக்குக் காரணமான தேனி மாவட்டத் தலைவர் இரகுநாகநாதன் அவர்களே,

தன்னுடைய சமூக இழப்பைப்பற்றியெல்லாம் கவ லைப்படாமல், கொள்கை ரீதியாக ஒரு பெரிய வர லாற்றை சாதித்துக் காட்டிய நம்முடைய டி.பி.எஸ்.ஆர். ஜனார்த்தன் அவர்களுடைய குடும்பத்தாருடைய உழைப் பும் ஒரு காரணம். என்ற பெருமைக்குரிய நிலையில், 

மண்டல செயலாளர் கருப்புச்சட்டை நடராஜன் அவர்களே, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் அவர்களே, மணிகண்டன் அவர்களே,

காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், எனக்கு முன் சிறப்பாக உரையாற்றிய அருமை சகோதரருமான மானமிகு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்ட திட்டக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் மானமிகு பொன்முத்து ராமலிங்கம் அவர்களே,

மாநாட்டின் தொடக்கவுரையை சிறப்பாக ஆற்றிய வரும், இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அருமைத் தோழர் ராமகிருஷ்ணன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொள்கை முத்து முத்தரசன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிக் குழு செயலாளரும், சிறந்த சொல்வேந்தருமாக இருக்கக் கூடிய கம்பம் செல்வேந்திரன் அவர்களே,

‘தீக்கதிர்’ பொறுப்பாசிரியர் மானமிகு அருமைத் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல்சமது அவர்களே, தேனி வடக்கு மாவட்ட திராவிட முன் னேற்றக் கழக செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அருமைச் சகோதரர் கனிஅமுதன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கொள்கை விளக்க அணி செயலாளர் அருமைத் தோழர் வந்தியத்தேவன் அவர்களே, ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் மணி அவர்களே,

ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய தோழர் மகாராஜன் அவர்களே, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் சரவணகுமார் அவர்களே,

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே, கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம் அவர்களே, தொழிலாளரணி மாநில செயலாளர் சேகர் அவர்களே, மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டி.பி.எஸ்.ஆர்.அரிகரன் அவர்களே,

திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் அவர்களே, கம்பம் நகர மேனாள் செயலாளர் வழக் குரைஞர் நெப்போலியன் அவர்களே,  திராவிட முன் னேற்றக் கழக கம்பம் வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக கம்பம் தெற்கு நகர செயலாளர் செந்தில்குமார் அவர்களே,

காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தோழர் போஸ் அவர்களே, சி.பி.அய். நகர செயலாளர் கல்யாணசுந்தரம் அவர்களே, சி.பி.அய். ஏரியா செயலாளர் மெல்வின் அவர்களே, கம்பம் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் தோழர் பாண்டியன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக் குழு துணைச் செயலாளர் ஜெயக்குமார் அவர்களே,தேனி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக துணைச் செயலாளர் இளங்கோ அவர்களே,

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் முருகேஷ் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் இராமகிருஷணன் அவர்களே, சி.பி.அய்.. மாவட்டச் செயலாளர் தோழர் அண்ணாமலை அவர்களே, சி.பி.அய்.(எம்). மாவட்டச் செயலாளர் பெருமாள் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சுமதி அவர்களே, ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் மற்றும் தோழர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துல்கறீம் அவர்களே, கம்பம் மாவட்ட இளைஞரணி தலைவர் தோழர் செந்தில்குமார் அவர்களே, தேனி மாவட்டத் தோழர் மணிகண்டன் அவர்களே, மதுரை மாநகர மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் அவர்களே, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எரிமலை அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கக்கூடிய கம்பம் மாவட்டச் செயலாளர் சிவா அவர்களே,

மற்றும் வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே 

முதல் முதலமைச்சர்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! தந்தை பெரியார் அவர் களுடைய பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு, நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் - இந்தியாவிலேயே முதல் முதலமைச்சர் என்ற பெருமையை இந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே பதிவு செய்திருக்கக் கூடிய நமதருமை முதலமைச்சர் அந்நாளை ‘‘சமூகநீதி நாள்’’ என்று அறிவித்தார்கள்.

இங்கே சிலருடைய கொள்கையற்ற ஒரு பார்வையின் காரணமாக, தெளிவற்ற பொதுவாழ்க்கையினுடய ஒரு நிலையை உருவாக்கிய சூழ்நிலையால்தான், நண்பர் டி.பி.எஸ்.ஆர். ஜனார்த்தனன், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள், கூட்டணிக் கட்சித் தோழர்கள் எல்லோரும் கொதித்தொழுந்தார்கள். அன்றைக்கு நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் சென்னையில் இருக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது.

அன்றைக்கு ஏற்பட்ட ஒரு சலசலப்புதான், இன் றைக்கு இவ்வளவு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறது. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைத் திரளும்படிச் செய்த அந்த நண்பர்களுக்கு என்னுடைய முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே வருகிறபொழுது ஒரு வேதனையான செய்தியைக் கேட்டுக்கொண்டுதான் வந்தோம். 

மனிதநேய அடிப்படையில்தான்...

அந்தச் செய்தி என்னவென்றால், சபரிமலை அய்யப் பன் கோவிலுக்கு, ஆண்டிப்பட்டியிலிருந்து நம்முடைய மக்கள் - நம்முடைய மக்கள் என்று சொல்லும்பொழுது, இன அடிப்படையில், மனிதநேய அடிப்படையில் நான் சொல்லுகிறேன்.

அப்படி அந்த மக்கள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்றவர்கள் விபத்துக்குள்ளாகி, 8 பேர் இறந்தனர் என்ற செய்தியைக் கேட்டபொழுது, உள்ளபடியே நாங்கள் பெரிதும் கலங்கினோம்.

அவர்களுக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக்கொண்டு, ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நிற்குமாறு அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

(அனைவரும் எழுந்து நின்று, ஒரு நிமிடம் அமைதி காத்தனர்).

தோழர்களே, சில பேர் நினைப்பார்கள்; இவர்கள்தான் அய்யப்பன் கோவிலுக்குச் செல்லாதவர்கள் ஆயிற்றே; கடவுள் மறுப்பாளர்கள் ஆயிற்றே, இவர்கள் ஏன் இதற்குப் போய் அனுதாபம் தெரிவிக்கிறார்கள் என்று.

அவர்கள் எங்களைப் புரிந்துகொள்ளாதவர்கள்; தந்தை பெரியாரைப் புரிந்துகொள்ளாதவர்கள்.

அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம், ‘கடவுளை மற' என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள், அதோடு நிறுத்தவில்லை; அடுத்த வார்த்தையாக என்ன சொன்னார் என்றால், ‘மனிதனை நினை' என்று சொன்னார்.

மனிதநேயத்தோடு பார்க்கக்கூடிய இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிட இயக்கம்

அந்த மனிதநேய அடிப்படையில், எங்களு டைய கணக்கில், அவர்கள் கோவிலுக்குச் சென்றது மூடநம்பிக்கை; ஆனால்,  உயிர்கள் என்பது அவர்கள் பக்தர்களாக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக இருந்தாலும் சரி, பா.ஜ.க.வினர் களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிக்காரர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும், மனிதநேயத் தோடு பார்க்கக்கூடிய இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிட இயக்கம்; அதற்குப் பெயர்தான் திராவிடம்.

‘திராவிட மாடல்’ என்பது மனிதநேயத்தோடு இருப்பது. தந்தை பெரியார் அவர்கள், மனித நேயத்தோடு தன்னுடைய பணியை செய்வார்.

நான் இங்கே உரையாற்றுவதற்கு முன்பாக, கடி காரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏனென் றால், கடிகாரத்தைப் பார்த்து பயந்துகொண்டிருக்க வேண்டிய நிலை. ஆனால், பலர் வேறு காரணத்திற்காக கடிகாரத்தைப் பார்த்து பயந்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் நேரத்திற்காக கடிகாரத்தைப் பார்த்து, ரயிலைப் பிடிக்கவேண்டுமே என்பதற்காக பயந்து கொண்டிருக்கின்றோமே தவிர, கட்டிய கடிகாரம் என்ன அதனுடைய வரலாற்று தாத்பரியத்திற்காக நாங்கள் பயப்படக் கூடியவர்கள் அல்ல.

பெரியார் மறைந்த நேரத்தில்....

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்தில், நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கலங்கிப் போய், ‘‘பெரியார் தன்னுடைய சுற் றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்'' என்று சொன்னார்.

இங்கே உரையாற்றிய வந்தியத்தேவன் அவர்களும் சொன்னார். அதுபோலவே, நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங் கோவன் அவர்களும் அதற்கு விளக்கம் சொன்னார். 

உடலால் அவர் நிகழ்த்திய சுற்றுப்பயணம் டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு முடிந்தது. ஆனால், அதற்குப் பிறகு அவருடைய தத்துவங்களுடைய சுற்றுப்பயணம் - ‘‘பெரியார் உலக மயம் - உலகம் பெரியார் மயம்‘‘ என்ற அளவிலே இன்றைக்கு உலகளாவிய நிலைக்குச் சென்றிருக்கிறது.

தளபதி பட்டுக்கோட்டை அழகிரியின் 

கம்பீர முழக்கம்!

எங்களுடைய தளபதி பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் - அவருடைய கம்பீரமான உரையின்பொழுது சொல்வார்கள்,

‘‘ஈட்டி இருக்கிறதே, அது எட்டிய வரையில் பாயும்;

பணம் பாதாளம் வரையில் பாயும்;

ஆனால், எங்கள் தந்தை பெரியார் இராமசாமி அவர் களுடைய கொள்கை, அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கு அப்பாலும் பாயும்'' என்று சொன்னார்கள்.

இப்பொழுது பாய்ந்து கொண்டிருக்கின்றது; உலகம் அதைக் கண்டுகொண்டிருக்கிறது, மிகத் தெளிவாக.

இந்த மாநாடு நடைபெறக்கூடாது; அவர் வந்தால், இவரைப் பற்றி பேசுவார்; அவர் மனதைப் புண்படுத் துவார் என்று காவல் நிலையத்திற்கு சிலர் மனு கொடுத் திருக்கிறார்கள்.

எங்களிடம் இருக்கின்ற கடப்பாரை - 

அறிவுக் கடப்பாரை!

காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் சில பேருக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெளி வாகத் தெரியவில்லை. ஏனென்றால், அவர்களுக்காகப் பரிதாபப்பட்டு, அவர்கள் திருந்துவதற்காகச் சொல் கிறேன், எங்களைப் பொறுத்தவரையில், இங்கே அமர்ந்திருக்கின்ற அத்துணை பேரையும் பார்த்துச் சொல்கிறேன்,

எங்களிடம் இருக்கின்ற கடப்பாரை - அறிவுக் கடப்பாரை; எங்களுடைய கடப்பாரை - சனாதனத்தை அடியோடு, வேரோடு பிடுங்கி எறிவது.

சமதர்மத்தை வா, வா என்று  அழைத்து அரசாங்கத்தில், அரியணையில் ஏற்றும்.

ஆனால், அந்தக் கடப்பாரை எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தையும் இடித்ததில்லை.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லுகின்ற எங்களால், எந்த ஒரு சிறு கடவுளுக்காவது ஒரு சிறு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இயக்கம்

அதேநேரத்தில், உங்கள் வரலாறு - தடை செய்யப்பட்ட வரலாறு. அதிலும் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு.

வித்தைகளால் ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு வித்தைக் காட்டுகிறீர்கள். உங்கள் வித்தை முடியப் போகின்ற நேரம் நெருங்கிக் கொண் டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் உங்களுக்குச் சொல்கிறோம், ‘‘திராவிட மாடல்’’ இந்தியா முழுவதும் தேவைப்படுகிறது என்று பத்திரிகையாளர்கள் உள்பட சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

‘‘திராவிட மாடல்’’ என்றால் என்ன?

‘‘திராவிட மாடல்’’ என்றால், என்னவென்று சில பேருக்குப் புரியவில்லையாம்!

என்ன புரியவில்லை?

‘‘திராவிட மாடல்’’ என்றால், இப்படி எல்லோரும் சமத்துவமாக, சகோதரத்துவமாக, ‘‘உடலினால், பலராக  இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே’’ என்று சொல்லக் கூடிய அளவிற்கு இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற, வற்புறுத்துகின்ற அமைப்பு இந்த அமைப்பு.

ஆகவே, நாங்கள் எல்லோரையும் இணைக்கிறோம். இதுதான் திராவிட மாடலினுடைய கொள்கை. சனாதனத்திற்கு நேர் எதிரானது. அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் எதிர்த்தார்கள்.

இன்றைய தலைமுறையினர் பெரியாரைப் பார்க்காத தலைமுறையினர். பெரியாரைப் பார்க்காதவர்கள், பெரியாரால் ஈர்க்கப்படுகிறார்கள் என்று சொன்னால், அதற்குக் காரணம் என்ன?

அழகாகச் சொல்லவேண்டுமானால், போர்க் கால கட்டத்தில் நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வதைவிட, நம்முடைய எதிரிகள்தான் முடிவு செய்வார்கள். நாம் என்ன ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று.

எனவே, அந்த முடிவு எங்கள் கைகளில் இல்லை - அது எதிரிகளிடத்தில் இருக்கிறது.

பெரியார் என்கிற பேராயுதம் - 

வன்முறையில் நம்பிக்கை இல்லாத ஆயுதம்!

அந்த ஆயுதம்கூட, பெரியார் என்கிற பேராயு தம்தான். அந்த ஆயுதம் வன்முறையில் நம்பிக்கை இல்லாத ஆயுதம். இதுவரை திராவிட இயக்கம் எவ்வளவோ சாதித்துக் காட்டியிருக்கிறதே - இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டினார்களே - தமிழ்நாட்டில் உள்ளதைப்போல் சமூகநீதி வேறு மாநிலத்தில் உண்டா? 69 சதவிகித இட ஒதுக்கீடு - இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 9 ஆவது அட்டவணையில் பாதுகாப்பாக இருக்கிறதே -  நம்முடைய பிள்ளைகள் அந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள்.

இட ஒதுக்கீடு என்றால் 

என்னவென்று தெரியுமா?

யாரால் வந்தது?

முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலுக்காவது இட ஒதுக்கீடு என்றால் என்னவென்று தெரியுமா? அல்லது 48 ஆயிரம் ரிஷிகளுக்காவது தெரியுமா?

பெரியார்! பெரியார்!! நீதிக்கட்சி, ‘திராவிட மாடல்’ ஆட்சியால்தான் நிகழ்ந்தது அது.

இன்னுங்கேட்டால், அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று ஆரியர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; அரசமைப்புச் சட்டத்தைக் காட்டினார்கள்.

வகுப்புரிமை செல்லாது என்றார்கள்; பொய்யைப் பரப்பினார்கள்; மனுவே போடாமல், மனு போட்டதாகச் சொல்லி ஒரு பார்ப்பன அம்மையார் வழக்குப் போட்டார். அந்த அம்மையார் செண்பகம் துரைராஜன், உச்சநீதிமன்றம் வரைக்கும் போனார்.  அதனுடைய விளைவு என்னாயிற்று? நீங்கள் எதைச் செய்தாலும், எதிர்புறம் உள்ளவர்களுக்குத்தான் பயனுள்ளதாக அமையும்.

தந்தை பெரியார் போராடினார்; அப்பொழுது நாங்கள் எல்லாம் பல்கலைக் கழக மாணவர்கள். எங் களைத் தெருத் தெருவாகச் சென்று பிரச்சாரம் செய்யுங்கள் என்றார்.

முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம்!

தந்தை பெரியார் அவர்கள் அப்படி போராடியதி னுடைய விளைவுதான், முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம்.

அதற்குப் பிறகுதான், தமிழ்நாட்டில் மட்டும் தெரிந்த சமூகநீதி - இந்தத் தீர்ப்பினால், இந்தியா முழுவதும் பயனடையக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. பண்டித ஜவகர்லால் நேரு, அம்பேத்கர் அவர்களும், பெரியா ருடைய போராட்டம் நியாயமானது என்று சொன் னார்கள். இங்கே காமராஜர் அவர்களும், பெரியாருடைய கோரிக்கை அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.

இப்படி கட்சியில்லை, ஜாதி இல்லை, மதமில்லை, சமூகநீதி பார்வைக்கு என்ற காரணத்தினால்தான், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் வந்தது. அதனுடைய பலன், தமிழ்நாட்டில் மட்டும் இருந்த வகுப்புரிமை என்பது, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அத்துணை பேருக்கும் பயனுள்ளதாக ஆயிற்று.

பெரியாருடைய போராட்டம் 

இந்தியா முழுவதற்கும் பயன்பட்டது

எனவேதான், பெரியாருடைய போராட்டம் இந்தியா முழுவதற்கும் பயன்பட்டது. இன்றைக்கும் அந்தத் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக் கின்றது.

பெரியாருக்குப் பிறகு எல்லாம் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். நண்பர்களே, அதற்குப் பிறகுதான், 69 சதவிகித இட ஒதுக்கீடு.

அதிலும், தன்னை ஒரு பார்ப்பன அம்மையார் என்று சொன்ன ஒருவர், அவருடைய ஆட்சிக் காலத்தில், அவரே இதைப் பின்பற்றித் தீர வேண்டிய நிலை.

காரணம் என்னவென்றால், எந்தக் கொம்பனாக இருந்தாலும், தமிழ்நாட்டில், பெரியாரைத் தாண்டி, பெரியாரின் சிந்தனைகளைத் தாண்டி, இந்த நாட்டில் எந்த ஆட்சியும் நடைபெற முடியாது. இதை நான் சொல்லவில்லை, வரலாற்று ஆசிரி யர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

மூன்று பார்ப்பனர்களை வைத்து நிறைவேற்றப்பட்ட சட்டம் 

69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்!

அதனுடைய விளைவாகத்தான் நண்பர்களே, 69 சதவிகிதம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பார்ப்பன அம்மையார் ஜெயலலிதா; பிரதமராக பி.வி.நரசிம்மராவ், இவர் ஒரு ஆந்திரப் பார்ப்பனர். அன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருந்தவர் உத்தரப்பிரதேச பார்ப்பனரான சங்கர்தயாள் சர்மா.

மேற்கண்ட மூன்று பார்ப்பனர்களையும் சேர்த்து வேலை வாங்கிய இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிடர் கழகம்.

யார், எந்த ரூபத்தில் வந்தாலும், அவர்களைக் கபளீகரம் செய்யக்கூடிய, ஈர்க்கக் கூடிய சக்தி எங்களிடம் இருக்கிறது; இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை; மக்கள், மக்கள், மக்கள் பலத்தோடு இருக்கக்கூடிய வாய்ப்பு என்பதுதான்.

அதேபோன்று மண்டல் கமிசன் அறிக்கையை, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங். அவர்கள் பிரதமராக இருந்தபொழுது கொண்டு வந்தார்.

அதனால் வேலை வாய்ப்பு வந்த சூழ்நிலையில், அதற்கடுத்து, கல்வியில் அது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகப் போராடினோம். 

திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்த யு.பி.ஏ. அரசில், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபொழுது, 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்து, அதன்மூலமாக கல்வியிலும் ஒன்றிய அரசில் இட ஒதுக்கீடு உண்டு என்ற நிலை ஏற்பட்டது.

தி.மு.க.காரர்களுக்கு மட்டுமா? 

அவர்களுடைய பிள்ளைகளுக்கு மட்டுமா?

இவ்வளவையும் அனுபவிக்கும் தோழர்களே, இது என்ன தி.மு.க.காரர்களுக்கு மட்டுமா? அவர்களுடைய பிள்ளைகளுக்கு மட்டுமா? அல்லது அந்தக் கூட்டணி யில் அங்கம் வகிக்கின்றவர்களுடைய பிள்ளைகளுக்கு மட்டுமா?

விவரம் தெரியாமல், எங்கோ சென்று தலையை நீ நுழைத்துக் கொண்டிருக்கின்றாயே, ஏமாந்த தமிழனே! விபீஷண தமிழனே! புரியாத தமிழனே, உங்களைப் பார்த்துச் சொல்கிறேன்,

உங்கள் பிள்ளைகளுக்காகவும்தான் நாங்கள் போராடுகிறோம். எங்கள் பிள்ளைகளுக்காக மட்டுமல்ல!

எங்களைப் பார்த்து நீங்கள் வரக்கூடாது என்று நினைக்கிறீர்களே! உங்கள் பிள்ளைகளுடைய படிப் பிற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.

இதைச் சொல்லுவதற்கு எங்களைவிட்டால், வேறு நாதி கிடையாது.

அந்த அமைப்பிலே யார் பேசுகிறார்கள்? பி.ஜே.பி. என்று  நினைக்காதீர்கள் நண்பர்களே, அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய கொள்கை!

அந்த அமைப்பின் கொள்கைப்படி, மாநிலங் களே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களு டைய கொள்கை. அதற்குப் பதில் ஒரே ஆட்சி; ஒரே தேர்தல்; ஒரே ரேசன் கார்டு; எல்லாம் ஒரே, ஒரே ஒரேதான்.

சரி, எல்லாமும் ஒரே என்று இருக்கவேண்டும் என்று சொல்லுகிறீர்களே, ஒரே ஜாதி என்று சொல்லுங்களேன், பார்ப்போம். அப்படி சொன் னீர்கள் என்றால், நாங்களும் மகிழ்ச்சியடைந்து உங்களுக்கும் சேர்த்து மாலை போடுகிறோம்.

அதைச் சொல்லுவதற்குத் தைரியம் உண்டா? அங்கேதான் விஷயம் இருக்கிறது.

எனவேதான், ஏமாந்து செல்லுகிறவர்களே, அங்கு என்ன நிலை என்பதை நினைத்துப் பாருங்கள்.

தமிழ்நாட்டில் காலூன்றலாம் என்று நினைக் காதீர்கள். 

ராகுல் காந்தியின் கூற்று சரியே!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி சொன்னார், ‘‘இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டில் காலூன்றலாம் என்ற உங்களுடைய நினைப்பு, நிறை வேறவே நிறைவேறாது’’ என்றார்.

ராகுல் காந்தி அன்றைக்குச் சொன்னது இருக்கட்டும்.

தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 49 ஆண்டுகள் ஆகின்றன. நேற்று கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் ஸ்டாலின் கருணாநிதி அவர்கள் அவ்விழாவில் கலந்துகொண்டார். இதுதான் ‘‘அனை வருக்கும் அனைத்தும்‘‘ என்பது - சமூகநீதி. யாரையும் வெறுக்கின்ற அரசு இல்லை, நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு.

அந்த விழாவில் சிறீசிறீ மகாலிங்க பிரம்மாச்சாரிய சுவாமிகள் என்று ஒருவர் பேசுகிறார். பழைய ஆதீனம் போன்றவர்.

எங்களுக்கு ஓர் ஆச்சரியம்; எப்படிடா, இவர் அந்த விழாவில் பங்கேற்கிறார் என்று. ஏனென்றால், இப் பொழுது பி.ஜே.பி,. ஆர்.எஸ்.எஸ்., பேர்வழிகள் நிறைய ஆதீனங்களைக் குத்தகை எடுத்திருக்கிறார்கள். 

அவர்களை மீட்கவேண்டிய பொறுப்பு நமக்குத்தான் உண்டு. ஆனால், இந்த ஆதீனம் அவர்களுடைய பிடியில் சிக்கவில்லை.

குன்றக்குடி அடிகளாருக்குப் பதிலாக ஒரு பொன்னம் பல அடிகளார்தான் இருக்கவேண்டும் என்று நாம் நினைத்தோம். இல்லை, இல்லை, இன்னொரு அடி களாரும் நானே கிளம்பியிருக்கிறேன் என்று சொல்லி, வந்திருக்கும்பொழுது, மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கும் பெரியார்! எதிலும் பெரியார்!! எப்பொழுதும் பெரியார்!!!

எங்கும் பெரியார்! எதிலும் பெரியார்!! எப்பொழுதும் பெரியார்!!! என்று சொல்லக்கூடிய அளவில், நரியார்கள் பயப்படக் கூடிய அளவிற்கு இருக்கிறது. பெரியாருடைய குரல் கேட்கிறது.

சிறீசிறீ மகாலிங்க பிரம்மாச்சாரிய சுவாமிகள் அந்த கிறிஸ்துமஸ் விழாவில் என்ன பேசினார் என்றால்,

‘‘கேரளாவில் கம்யூனிஸ்டுகளும், தமிழ்நாட்டில் திராவிடர் கழகமும் இருப்பதால், அங்கும் - இங்கும் பா.ஜ.க.வினரால் காலூன்ற முடியவில்லை; முடியாது’’ என்றார்.

எனக்கு 90 வயது ஆகிறது என்று சொன்னார்கள்; 90 வயதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. தோழர் முத்தரசன் அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது, பூஜ்ஜியத்தை 9-க்குப் பின்னால் போடாமல், முன்னால் போட்டார்.

எதிரிகளுடைய வியூகத்தை எதிர்த்து முறியடிக்கக்கூடிய 

ஆற்றல் இருக்கவேண்டும்

உழைப்பதற்கு வயது கிடையாது நண்பர்களே, நம்முடைய எதிரிகளுடைய வியூகத்தை எதிர்த்து முறியடிக்கக்கூடிய ஆற்றல் இருக்கவேண்டும்; அதை முறியடிக்கக்கூடிய ஆவேசம் இருக்க வேண்டும். அந்த ஆற்றலும், நம்பிக்கையும், திறமையும் இருக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

சிறீசிறீ மகாலிங்க பிரம்மாச்சாரிய சுவாமிகள் பேசிய பேச்சையும், தளபதி பட்டுக்கோட்டை அழகிரி சொன்னதையும் நினைத்துப் பாருங்கள்.

பெரியாருடைய கருத்துகள் அண்ட பிண்ட சராசரங்களிலும் பாயும்; ஆதீனங்களிடையேயும் பாயும்.

நண்பர்களே, பெரியோர்களே அதிக நேரம் பேச வாய்ப்பில்லாவிட்டாலும், மீண்டும் தமிழர்கள், திராவிடர்கள், திராவிடம் காப்பாற்றப்படவேண்டும் என்றால், அது எங்களுக்காக அல்ல; ஸ்டாலினுக் காக அல்ல; தி.மு.க.விற்காக அல்ல; கூட்டணிக் கட்சிக்காரர்களுக்காக அல்ல. உங்கள் எதிர்கால சந்ததியினருடைய படிப்பிற்காக - கல்விக்காக - உத்தியோகத்திற்காகத்தான் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இங்கே உரையாற்றியவர்களின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்!

இந்த வாய்ப்பிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மாநாடு வெற்றி பெற உழைத்த பாராட் டுக்குரிய தோழர்கள் மாவட்டத் தலைவர் தமிழ்ச் செல்வன், மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்ட இளை ஞரணி தலைவர் முத்தமிழன், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், கே.கே.பட்டு நகர தலைவர் முருகன், நகர செயலாளர் அழகேசன், கே.கே.பட்டு நாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் குமரேசன் ஆகி யோருக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனை வருக்கும் நன்றி தெரிவித்து, நேரம் இல்லா விட்டா லும்கூட, காலத்தோடு, கருத்தோடு இங்கே அனைவரும் உரையாற்றினார்கள். அவர்களின் உரையை நான் அப்படியே வழிமொழிகிறேன். விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

மாநாடு நிகழ்ச்சி

கம்பம் நகரில் தந்தை பெரியார் நினைவுநாள், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை ஜனநாயக முற்போக்கு கொள்கை விளக்க திறந்தவெளி மாநாடு  கம்பம் பார்க் திடலில் நடைபெற்றது.

அந்த  முப்பெரும் விழாவிற்கு பொதுக்குழு உறுப் பினர் டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனன் தலைமை வகித்தார்.

கம்பம் மாவட்ட தலைவர் வெ.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.

தேனி மாவட்ட தலைவர் ச.இரகுநாகநாதன், திண்டுக்கல் மண்டல செயலாளர் கருப்புச்சட்டை நடராஜன், தேனி மாவட்ட ப.க.தலைவர் டி.பி.எஸ்.ஆர்.அரிகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திறந்தவெளி மாநாட்டை கம்பம் சட்டப்பேரவை உறுப் பினர் என்.இராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றிட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தி.மு.க. உயர்மட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச் செல்வன், தி.மு.க.தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன், ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தீக்கதிர் பொறுப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன், ம.ம.க.பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகி யோர் கருத்தரங்கில் உரை நிகழ்த்திட  நிறைவாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.மகாராஜன் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அதியர்மணி உள்ளிட்ட தலை வர்களும், திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் சுப.முருகானந்தம் , மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் த.ம.எரிமலை, மதுரை மண்டல செயலாளர் சிவகுருநாதன், ந.முருகேசன், தேனி மாவட்ட கழக துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன் உள்ளிட்ட ஏராளமான கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த கழகத் தலைவரை கம்பம் நகர் நுழைவாயிலில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ்.கே. மன்றத்தின் நிர்வாகிகள் வரவேற்று மகிழ்ந்தனர். கம்பம் நகரெங்கும் கழக கொடிகள் கட்டப்பட்டு வட்டார மாநாடு போல ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

தோழமை கட்சிகளின் நிர்வாகிகளும் பொறுப் பாளர்களும் கழகத் தலைவருக்கு பொன்னாடை மற்றும் பயனாடை அணிவித்தும் வரவேற்றனர். திறந்தவெளி மாநாடு அழைப் பிதழில் குறிப்பிட்டது போல மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு தமிழர் தலைவரின் சிறப்புரையோடு நிறை வடைந்தது.


No comments:

Post a Comment