அரியலூர் மாவட்டம் நாயக்கர்பாளையம் கழகத் தோழர் கி. சவுந்தரராசன், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் - வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றதையொட்டி தமிழர் தலைவர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். தமிழர் தலைவர் அவர்கள், முனைவர் கி. சவுந்தரராசனைப் பாராட்டி அவரது இணையர் க. இந்திரா, மகள் இ.சவு. இதழினி ஆகியோருக்கு சால்வை அணிவித்தார். பெரியார் பிஞ்சு இ.சவு. இதழினி ஓராண்டு பெரியார் பிஞ்சு சந்தா மற்றும் பெரியார் பிஞ்சு வளர்ச்சி நிதியையும் வழங்கினார். கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வாழ்த்துத் தெரிவித்தார். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன்.
No comments:
Post a Comment