தலைவர்களுக்கு சிறப்பு செய்தவர்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் - கே.சி எழிலரசன் (மாவட்டத் தலைவர்), கவிஞர் கலி. பூங்குன்றன் - விஜயா அன்பழகன் (மகளிரணி அமைப்பாளர்), கவிஞர் கனிமொழி - அகிலா எழிலரசன் (மாநில மகளிரணி பொருளாளர்), மாண்புமிகு எ.வ. வேலு - வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர்), ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - பெ. கலைவாணன் (மாவட்ட செயலாளர்), மரு. சோம. இளங்கோவன், மரு. சரோஜா இளங்கோவன் - தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), பேரா.சுப. வீரபாண்டியன் - அண்ணா சரவணன் (மாநில துணைத் தலைவர் ப.க.), பொறியாளர் மு. செந்திலதிபன் - ஏ.டி.ஜி. சித்தார்த்தன் (நகர கழகச் செயலாளர்), ஆளூர் ஷானவாஸ் (சட்டமன்ற உறுப்பினர்) - எழில் சிற்றரசன் (மண்டல இளைஞரணி செயலாளர்), சிங்கப்பூர் இலியாஸ் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு செய்தவர்கள்
சி.என். அண்ணாதுரை (நாடாளுமன்ற உறுப்பினர்) - சி. தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர், ப.க.), கே. தேவராஜ் (சட்டமன்ற உறுப்பினர்) - வே. அன்பு (மாவட்டச் செயலாளர் ப.க.), ஏ. நல்லதம்பி (சட்டமன்ற உறுப்பினர்) - சோ. சுரேஷ்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), ஏ.பி. நந்தகுமார் (சட்டமன்ற உறுப்பினர்) - வி. சடகோபன் (மண்டல தலைவர்), ஏ.சி. வில்வநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) ஆம்பூர் - ஆர். நரசிம்மன் (மாவட்ட காப்பாளர்), எஸ். ராஜேந்திரன் (நகர செயலாளர்) - ஏ.டி.ஜி. இந்திரஜித், என்.கே.ஆர். சூரியகுமார் (மாவட்ட ஊ.குழு தலைவர்) - தங்க அசோகன் (மாவட்ட துணைத் தலைவர்), சங்கீதா வெங்கடேசன் (நகர் மன்ற தலைவர்) - இரா. கற்பகவள்ளி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), ச. பிரபு (மாவட்டத் தலைவர், காங்கிரஸ்) - அ. உலகன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்), ஜெ. விஜய் இளஞ்செழியன் (காங்கிரஸ்) - மா. பன்னீர்செல்வன் (மாவட்ட துணை செயலாளர்), பி. கணேஷ்மல் (தலைவர், காமராஜ் அறக்கட்டளை) - து. காளிதாஸ் (நகர தலைவர்), இ. பரத் மேனாள் எம்.சி. (காங்கிரஸ், திருப்பத்தூர்) - முருகன் (நகர அமைப்பாளர்), வ. கண்ணதாசன் (மாவட்ட செயலாளர் மதிமுக) - கனகராஜ் (ஒன்றிய தலைவர் கந்திலி), இரா. கபாஸ்சந்திரபோஸ் எம்.சி. (மாவட்ட செயலாளர், விசிக) - சோலையார்பேட்டை இராஜேந்திரன், சிங்கராயர் (து.பொ.செ. திராவிட இ.த.பேரவை) - சோலையார்பேட்டை பாண்டியன், டி.ஆர். இளங்கோவன் (ந.செ. மதிமுக) - க. மதியழகன் (சோலையார்பேட்டை ந.த.)
விடுதலை சந்தா அளிப்பு
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்) தலைமையில் விடுதலை சந்தாக்கள் வழங்கியோர்
இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு. சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), ஊமை செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), பொன்னேரி வி. பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), ஈரோடு த. சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர், த.சீ. இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), இரா. செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), மாரி கருணாநிதி (மாநில கலை இலக்கிய மன்றம்)
முன்னிலை
வீ. குமசேரன் (பொருளாளர்), சே.மெ. மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்), ச. இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), இரா. தமிழ்ச்செல்வன் (மாநில ப.க. தலைவர்.
'விடுதலை' சந்தா பெற்றுக் கொண்டவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
விழாவில் நூல் வெளியீடு
(1) சிங்கப்பூரில் தமிழர் தலைவர் தொகுதி - 2 (ஆசிரியர்: சிங்கப்பூர் எம். இலியாஸ்).
(2) நினைவுகளும் - நிகழ்வுகளும் (ஆசிரியர்: கி. வீரமணி)
(3) தந்தை பெரியார் பிறந்த நாள் - விடுதலை மலர்
மாநாட்டில் இவற்றை வெளியிட்டவர்: மாண்புமிகு எ.வ. வேலு பொதுப் பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
ரூ.700 கொடுத்துப் பெற்றுக் கொண்ட பெரு மக்கள்
ஏ.பி. நந்தகுமார் (சட்டமன்ற உறுப்பினர்) வேலூர், ஏ.சி. வில்வநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) ஆம்பூர், என்.கே.ஆர். சூரியகுமார் (மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்), சங்கீதா வெங்கடேசன் (நகர்மன்ற தலைவர், திருப்பத்தூர்) ச. பிரபு (மாவட்ட தலைவர், காங்கிரஸ்), ஜெ. விஜய் இளஞ்செழியன் (மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ்), பி. கணேஷ்மல் (தலைவர், காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை), இ.பரத் மேனாள் எம்.சி., (திருப்பத்தூர்) வ. கண்ணதாசன் (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.), இரா. சுபாஷ் சந்திரபோஸ் (மாவட்ட செயலாளர், வி.சி.க.), சிங்கராயர் து.பொ. செயலாளர் தி.இ.த.பே.), டி.ஆர். இளங்கோவன் (நகர கழக செயலாளர், ம.தி.மு.க.).
நூற்றாண்டு கண்ட வெகு மக்களுக்குப் பாராட்டு
103 வயது கண்ட பெங்களூர் வேலு, 101 வயது அடைந்த பொத்தனூர் க.சண்முகம், 101 வயது கடந்த ஆத்தூர் தங்கவேலு ஆகியோர்களுக்கு விழா மேடையில் பலத்த கைத் தட்டலுக்கிடையில் சால்வை போர்த்திச் சிறப்பு செய்தார் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.
ஏ.டி. கோபால் நூற்றாண்டு நினைவு புகைப்படக் கண்காட்சி
திருப்பத்தூர் - 'சுயமரியாதைச் சுடரொளி' ஏ.டி. கோபால் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, முப்பெரும் விழா மேடைக்கு அருகில் புகைப்படக் கண்காட்சி அரங்கம் ஏற்பாடு சிறப்பாக இருந்தது. ஏ.டி. கோபால் அவர்களின் சிறு வயது முதல் பல்வேறு கழக நிகழ்ச்சிகளின் அரிய தொகுப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புகைப்படக் கண்காட்சியை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் திறந்து வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கே.சி. எழிலரசனுக்குச் சிறப்பு
விழாவில் ஏற்புரை வழங்கிய திராவிடர் கழகத் தலைவருக்குத் திருப்பத்தூர் மாவட்டக் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் சால்வை போர்த்தினார். அந்த சால்வையினை கே.சி. எழிலரசனுக்கு கழகத் தலைவர் திருப்பிப் போர்த்தியபோது பலத்த கைதட்டல்.
சிங்கப்பூர் இலியாசுக்கு பாராட்டு
சிங்கப்பூரில் தமிழர் தலைவர் தொகுதி (2) நூலை எழுதிய சிங்கப்பூர் இலியாசு அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை போர்த்த பெரும் கரஒலி!
No comments:
Post a Comment