சென்னை,டிச.18- சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத் தவும் ஆந்திரா, கருநாடகா செல்லக் கூடிய பேருந்துகள் வசதிக்காகவும் 24.8 ஏக்கரில் ரூ.336 கோடி மதிப்பில் சென்னையின் 4ஆவது புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் திருமழிசை அருகே அமையவுள்ள பேருந்து நிலையம் 2023-க்குள் தயாராகும். 25 ஏக்கரில் ரூ.307 கோடி செலவில் அமையவிருக் கும் பேருந்து நிலையத்தை அமைச்சர் கள் பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்படி மாநில வீட்டுவசதி வாரியத்தின், திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு 336 கோடி ரூபாயில், அய்ந்து லட்சம் சதுர அடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2021 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தில் மேற்கு மண்டலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கருநாடக மாநில போக்குவரத்துக் கழகம் ஆம்னி பேருந்துகள் இயங்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 80 விழுக்காடு நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டனர். குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 70 புறநகர் பேருந்துகள், 30 ஆம்னி பேருந்துகள், 36 மாநகர பேருந்துகள் மற்றும் 48 புறநகர் பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வகையில் திட்ட வரைபடம் அமைத்து, அதன்படி கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றது
மேலும் பேருந்து நிலையத்தின் கீழ்தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், ‘பார்க்கிங்’ வசதியும் வடிவமைக் கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. பயணியர் பயன்படுத்தும் வகையில், நான்கு ‘லிப்ட்’டுகள், பணிகள் மேற்கொள்ள இரண்டு ‘லிப்ட்’டுகள், மூன்று நகரும் படிக்கட்டுகள் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு அறையும் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பணிகள் 80 விழுக்காடு முடிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு (2023) மே அல்லது ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க திட்டமிட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது’’ என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊராட் சிக்குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் பா.ச. கமலேஷ், நகர செயலாளர்கள் ஜிஆர்.திருமலை, தி.வே.முனுசாமி, பேரூ ராட்சி தலைவர் உ.வடிவேல், ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், துணைத் தலைவர் ஜெ.மகா தேவன், மாவட்ட பிரதிநிதி பூவை.ஜெ.சுதாகர் உள்பட பலர் இருந்தனர்.

No comments:
Post a Comment