“இடஒதுக்கீடு வேண்டும்... இல்லையென்றால் தேர்தலில் பதிலடி கொடுப்போம்”: லிங்காயத் சமூகத்தினர் பா.ஜ.க.விற்கு எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

“இடஒதுக்கீடு வேண்டும்... இல்லையென்றால் தேர்தலில் பதிலடி கொடுப்போம்”: லிங்காயத் சமூகத்தினர் பா.ஜ.க.விற்கு எச்சரிக்கை!

பெங்களுரு, டிச. 25. கருநாடகத்தில் மிகப் பெரிய வாக்கு வங்கியாக திகழ்வது லிங்காயத் சமூ கத்தினர். கருநாடக மாநி லத்தில் உள்ள லிங்காயத் சமூகத்தில் உள்ள 102 பிரிவுகளில் பெரும் பான்மையாகத் திகழ்ப வர்கள் பஞ்சமசாலி வகுப்பினர்கள்.

இந்த வகுப்பினர்கள் தங்களுக்கு 3 டி அடிப்ப டையில் கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, அதிகப் படியாக 2ஏ என்ற பிரி வின் கீழ் தங்களுக்கு இட மளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர். இப்போது பெலகாவி மாவட்டத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்ட மன்ற வளாகத்திற்கு வெளியே பல்லாயிரக்க ணக்கான லிங்காயத் தொகுப்பில், பஞ்சமசாலி வகுப்பினர் ஒன்று கூடி பா.ஜ.க அரசுக்கு எதிராக தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி போராட் டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் அந்த வகுப்பின் மடாதிபதி பசனகவுடா பாட்டில் தலைமையில் நடை பெற்றது. மேலும் அவர் பா.ஜ.க அரசுக்கு கடுமை யான எச்சரிக்கை விடுத்தி ருக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டத் தில் தங்கள் கோரிக்கை களை நிறைவேற்ற வேண் டும் எனவும், இல்லை யெனில் சட்டமன்ற தேர் தலில் ஒட்டுமொத்தமாக பா.ஜ.க கட்சியை புறக்க ணித்து மக்கள் அவர்க ளுக்கு தண்டனையை வழங் குவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment