பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

காசிப் புலவரும் காஞ்சித் தமிழரும் சந்தித்த வேளையில்...

காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்வதற்காக காஞ்சியிலிருந்து ஒரு தமிழர் சென்றார். சென்ற இடத்தில் காசியில் ஒரு புலவரை  சந்தித்தார். சங்கம நிகழ்வைப்  பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த பின் இருவரும் கங்கை நதியோரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதனை உற்றுக்கேட்ட அல்லது ஒட்டுக் கேட்ட ஒருவரின் பதிவு இது. சும்மா இல்ல...  ஆண்ட்ராய்டு போனில் பதிவு செய்யப்பட்டது. முதல் குரல் காசிப்  புலவருடையது தொடரும் குரல் காஞ்சித்தமிழருடையது.  கேட்ட குரல் வரிசையில் அப்படியே படிக்கலாம்

“பாத்தீங்களா, பிரதமர் தமிழ எப்படிக் கொண்டாடி இருக்கி றார். அவரை சும்மா குறை சொல்றீங்களே”

“சும்மா இல்ல. நிஜமாவே குறை சொல்றோம். அந்திம காலத்திலேயாவது...” 

“அது என்ன அந்திம காலம்? அவருக்கு 70 வயது தான் ஆகுது. 

நான் அதைச் சொல்லல. அவரோட ஆட்சிக் காலத்த சொல்றேன். அதி கப்பட்சம் இன்னும் ஒண்ணர வருஷந்தான.... அது இருக்கட்டும்... காசி தமிழ் சங்கமம் என்றால் காசிக்கும் தமிழ் மொழிக்கும் சங்க மமா? காசிக்கும் தமிழர்களுக்கும் சங்கமமா? புரியாத... புதிரான தலைப்பா இருக்கே.” 

“காசியில் பேசிய மொழிக்கும் தமிழுக்கும் ஸ்நான பிராப்தி கூட இல்லை. தமிழ் என்றால் தமிழர்கள் என்றுதான் அர்த்தம். இதையெல்லாம் விளக்கணுமா?”  

தமிழர்களுக்கும் காசிக்கும் மட்டுமல்ல.... தமிழர் களுக்கும் இமயமலைக்கும் கூட தொடர்பு இருக்கிறது. “கனக விஜயர்தம் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேர மகன்... இமயவரம்பினில் மீன்கொடி யேற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே” என்ற பாட்டை நீங்கள் கேட்டதில்லையா? கேட்டிருக்க மாட்டீங்க.. தமிழ்தான் உங்களுக்கு வேப்பங்காய் ஆச்சே” 

“யார் சொன்னதை? பிரதமர் பேச்சை ஆரம் பிக்கும் போதே வணக்கம் காசி! வணக்கம் தமிழ்நாடு! என்றார். முடிக்கும் போதும் வணக்கம் என்றாரே...”  

“வணங்கித்தான் ஆகவேண்டும். வேறு வழியில் லையே.... புலவரே! ஒன்றை கவனித்தீரா? சென்றவாரம் தமிழ் நாட்டுக்கு வந்தபோது ஆங்கிலத்தில் பேசினார். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து பலரையும் காசியில் கூட்டி வைத்துக்கொண்டு இந்தியில் பேசுகிறார். இது இரட்டை வேடம் இல்லையா புலவரே!” 

“அரசியலில் இதெல்லாம் சகஜந்தானே? அதிலும் எங்க பிரதமருக்கு ரொம்பவும் சகஜம். காசியைப் புண்ணிய நகரம் என்று சொன்னது சரிதானே?”  

“ஆமாம் ... ஆமாம்... ரொம்பவும் புண்ணிய நகரம். அந்தக் காலத்தில் யாத்திரை சென்றவர்களை சிவ லோகம், வைகுந்தம் போகலாம் என்று மோட்சக் கிணற்றில் குனிய வைத்து வெட்டி விடுவார்களாம். இதற்கு ‘காசி கரு வட்டு’ என்று சுத்தானந்த பாரதி சொல்லியிருக்கிறார். முண்டமான உடல்கள் கங்கையில் மிதக்கும். சிறுவயதில் காசியில் இதையெல் லாம் பார்த்ததாலோ என்னவோ “செத்த பிறகு சிவ லோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் எனும் பித்த மனிதரின் பேயுரையை” நம்ப வேண்டாம் என்று பாரதியார் பாடியிருக்கிறார். அதற்கு மேலும் சொல்கிறேன் நகரத்தில் சிறந்தது காஞ்சி என்று தமிழ் கவிஞன் இல்லை சமஸ்கிருத புலவரே சொல்லியிருக்கிறார். “நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி”. பொருள் புரியுதா புலவரே? உங்களுக்கு புரிந் திருக்கும். சமஸ்கிருதமாச்சே. உங்க காசியை விட எங்க காஞ்சி (சமணம், பவுத்தம், சைவம், வைணவம் எல்லாம் கலந்திருந்த பழைய காஞ்சி) சிறந்தது என்பது சமஸ்கிருத புலவருக்கே தெரிஞ்சிருக்கு”  

“வம்பளக்காதீங்க... தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்கும் காசிக்கும் தொடர்பிருக்குன்னு பிரதமர் பேசினார். அது புரிஞ்சுதோ?”  

“புரிஞ்சுது..... புரிஞ்சுது.... சில பெயர்களை சொல்லி மன மயக்கம் ஏற்படுத்தலாம்னு பிரதமரும் சங்கிகளும் நெனைக் கிறாங்க. அது நடக் காது. சுந்தரம் பிள்ளை தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது இன்னொன்றையும் சொல்லி இருக் கிறார். நான் சொல்றது பிரதமருக்கு போய்ச்சேராது. சேர்ந் தாலும் உண்மையை உணரப் போறதில்ல. அதனால உங்களுக்கு சொல்றேன். சமஸ்கிருதத் திணிப்பை சுந்தரம் பிள்ளை கடுமையாக எதிர்த்தவர். அதுமட்டு மல்ல... “ஆரியம்போல் வழக் கொழிந்து அழியா உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” என்று பாடியிருக்கிறார். சமஸ் கிருத மொழி செத்த மொழி என்றும் சொல்லியிருக் கிறார். அதைத்தான் நீங்கள் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்று கூறி எங்கள் காதுகளில் பூந்தோட்டம் போடப் பார்க் கிறீர்கள். அவ்வளவுதானா? இன்னும் ஒன்றை யும் சொல்கிறேன். கேட்டுக்குங்க. மனுநீதியை மாண்புமிகு நீதி என்றே சொல்லித் திரியும் உங்களுக்கு சவுக்கடி கொடுத்தவர் சுந்தரம் பிள்ளை. “வள்ளுவன் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந் தவர்கள் உன்னுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி” என்றார். என்ன நெளியுறீங்க சவுக்கடி தாங்க முடியலையா?”  

“அதெல்லாம் ஒண்ணு மில்ல... கொளவி சுத்தி சுத்தி வந்தது. கடிச்சிடு மோன்னு அசைஞ்சேன். அதுசரி... எங்க கட்சியைப் பற்றியும் கங்கையைப் பற்றியும் சங்க இலக்கியம் கலித்தொகையில் சொல்லியிருக்குன்னு பிரதமர் சொன் னாரே அது பொய்யா?” 

“வெறும் பொய்யில்ல.... ஜமுக்காளத்துல வடிகட்டின பொய். காசியைப் பற்றி கங் கையை பற்றி கலித்தொகை யில் என்ன சொல்லி இருக்குன்னு ஆதாரத்தோடு நிரூபிக்க சொல்லுங்க. இது பிரதமருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சங்கிகளுக்கும் அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிற அறிவு ‘சீவி’களுக்கும் விடுகிற சவால். ஏத்துக்க சொல்றீங்களா?”  

“நான் எப்படி சொல்றது? நானே கும்பல்ல கோவிந்தா போட வந்தவன். நாங்கல்லாம் தண்ணி ஓடற திசையில ஓடி பொழச்சி கரை சேர்ந்தா போதும்னு நினைக்கிறவங்க. உங்கள மாதிரி எதிர்நீச்சல் போட்டு சவால் விட்டு கிட்டு இருக்க மாட்டோம். அப்பறம்..... தமிழர் கள் திருமணத்தில் காசி யாத்திரை போகிற பழக்கம் இன்னமும் இருக்குன்னு சொல்லி இருக்கிறாரே அது கூட ஆதாரம் இல்லாததா?”  

“அதுக்கு ஆதாரம் இருக்கு. ஆனால் எல்லா தமிழர்கள் திருமணத்திலயும் இல்ல. ஒரு பிரிவினர் திருமணத்தில் இருக்கு. காசி யாத்திரை சடங்கு கூட காசிக்கு போகச் சொல்வதற்காக அல்ல. குடும்பத்தில் கோபித்துக் கொண்டு காசிக்குப் போகாதே. அது சந்நியாசத்தனம். இல்லறம் தான் சிறந்த அறம் என்று கூறி மாப்பிள்ளையை நெறிப்படுத்தும் சடங்கு. “மங்கை நல்லா ளோடும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்று பாடிய அப்பர் வாழ்ந்த தமிழ்மண். இதெல்லாம் மனைவி மக்களோடு குடும்பம் நடத்துகிற வர்களுக்குத்தான் புரியும். காசிக்குப் போவது எவ்வளவு தீங்கானது என்பதை தமிழ் சினிமா பாட்டாவே பாடி இருக்கு. “காசிக்குப் போகும் சன்யாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி” என்ற பாடலை முழுசா கேளுங்க. நீங்கதான் இப்போ யூ ட்யூப் சாமியா ராச்சே! அப்போது புரியும் காசிக்கும் தமிழர்களுக்கும் உள்ள ‘சங்கம’ சம்பந்தம். நல்லவேளை இந்த முறை திருக்குறளை சொல்லி பிரதமர் சிக்கல் பண்ணல...”  

“நீங்க சரியா கவனிக்கலியா? காசியின் துளசிதாச ரோடு திருவள்ளுவரை இணைத்து பிரதமர் பேசினாரே.... அது எப்படி சிலது எல்லாம் விட்டுட்டு பொழப்பு நடத்த முடியுமா?”  

“சரியா சொன்னீங்க. அரசியல், சமூகம், பொருளாதாரம், ஆன்மீகம், எல்லாமே உங்களுக்கு பொழப்புதான். எங்களுக்கு வாழ்க்கை நெறி. அதைத்தான் திருக்குறள் சொல்லுது. பிரதமருக்கு முன்னாடி பேசின எங்க ஊரு இளையராஜா அத அழகா சொன்னாரு. ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத் தில் வீழ்ந்து’ விட்டாலும் அவர் இரண்டு அடி யால் உலகளந்த திருவள்ளுவரோடு ‘தோஹே' எனும் இரண்டு வரி கவிதைகளால் நற்சிந்தனை களைப் பரப்பிய கபீர்தாஸை ஒப்பிட்டுப் பேசினார். அந்த கபீர் சொல்கிறார்: “நீ வளர்ந்து உயர்ந்து விட்டாய், அதனால் என்ன? பனை மரம் கூடத்தான் உயர்ந்திருக்கிறது, நிழலா தருகிறது?” இது நம் நாட்டின் பிரதமருக்கும், பாஜகவுக்கும் சங்பரிவாரங் களுக்கும் பொருத்தமானது. நிழல்தரா மரம் என்பது பனைமட்டும் அல்ல; பேராசிரியர் அருணன் பாஷையில் சொன்னால் கழுமரம். அப்படித் தான் மோடி தலைமையிலான அரசு உள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மனம், உடல், அரசியல், பொருள் என அனைத்து வகையிலும் கழுவேற்றப்படுகிறார்கள். இந்தக் கழுமரம் விரை வில் அகற்றப்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பம்; அகற்றப் படும் என்பது எங்களின் நம்பிக்கை.”  

“நம்புங்க.... நம்புங்க.... உங்க நம்பிக்கை பலிச்சா நாட்டுக்கு நல்லது. ஆனால் “தமிழ் மொழியை மறந்தால் அது நாட்டுக்கு நஷ்டம்” என்று பிரதமர் சொல்லி இருப்பதை எண்ணிப் பாருங்கள்.”  

“தமிழ் மொழியை மறப்பது நாட்டுக்கு நஷ்டம். அடப் புலவர்! இதைத்தான் நாங்கள் காலம் காலமாக சொல்கிறோம். ஹிந்தியும் சமஸ்கிருதமும் மட்டுமே என்று நீங்கள் சொல்வது போல் தமிழ் மட்டுமே என்று நாங்கள் சொல்லாமல் அரசியல் சாசன அட்ட வணையில் உள்ள 22 மொழிகளை யும் சமமாக நடத்தச் சொல்கிறோம். அதுதான் இந்தியாவை ஒன்று படுத்தும்; கலாச்சார பன்மைத் துவத்தைப் பாதுகாக்கும் என்கிறோம். இன்றைய தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் இது சாத்தியம் என்கிறோம். ஆதிக்க மனோபாவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்கி றோம். “வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு” என்ற பாரதி வழியை காட்டுகிறோம். ஆனால் அதற்கு ஏற்ப நடப்பதாக தெரியவில்லை.

“நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வது போலவும், சிந்தையில் கள் விரும்பி சிவ சிவ” என்று நடிப்பது போலவும்தான் காசி தமிழ் சங்கமம் இருக்கிறது. ஹிந்துத்துவாவை பரப்புவதற்கு ஹிந்து மகாசபையை நிறுவிய மதன் மோகன் மாளவியா உருவாக்கிய பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும், பேராசிரியராகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் மதிக்காத, அம்பேத்கர் பெரியார் சிந்தனை வட்டம் என்கிற பெயரையே சகிக்காத சென்னை அய்அய்டியும் இந்த சங்கமத்திற்கு அறிவுக் கூட்டாளியாக இருப்பது எங்கள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதற்கு என்ன சொல்றீங்க?”  

“சொல்றதுக்கு என்ன இருக்கு? காசியில் இருந்து கூலிக்கு மாரடிச்சு மூளை மழுங்கி கங்கையில் மூழ்கி சாவதை விட உங்களோடு காஞ்சிக்கு வந்து கொஞ்சமாவது அறிவு வளர்த்து தமிழைப் படித்து கதி மோட்சம் அடை யலாம்னு தோணுது.”  

“அப்பவும் மோட்சம் தானா? சரி வாங்க புறப்படு வோம். காசி சங்கமம் ஓசி யாத்திரை வேண்டாம். காசு கொடுத்து ரயிலில் பயணம் பண்ணுவோம். தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்வோம்.”

ஒட்டுக்கேட்டவர்: பத்திரிகையாளர்  மயிலை பாலு

- நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர், 27.11.20222


No comments:

Post a Comment