ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு கிருஷ்ணகிரியில் வீர வணக்கப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு கிருஷ்ணகிரியில் வீர வணக்கப் பொதுக்கூட்டம்

சென்னை, டிச.15   திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்குத் தமிழ் நாடெங்கும் வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள் நடை பெற்றன.

விவரம் வருமாறு:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத்திரம் கிராமத்தில் 30.11.2022  மாலை 6 மணி அளவில் ஜாதி ஒழிப்பு போராளி களுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் அறிவரசன் தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஒன்றிய தலைவர் த. மாது அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம்,மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.

தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர்  த.யாழ்திலிபன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் அறிவரசன் தலைமை உரைக்குப்பின் மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முரு கேசன், மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், ஊற் றங்கரை ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் ஆகியோர் உரையாற்றினர். 

மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி சிறப்புரையாற்றினார் .இறுதியாக மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் நிறைவுரையாற்றினார்.

மேலும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வே.மாதையன், பொறுப்பாளர்கள் வெங்கடேசன், கலையரசன், பிரேம்குமார் மற்றும் ஓசூர் மாவட்ட கழக தலைவர் சு. வனவேந்தன், பர்கூர் ஒன்றிய செயலாளர் மு.ரகு நாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிமுத்து ராஜேசன், காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம், அமைப்பாளர் சி. ராஜா, ஊற்றங்கரை ஒன்றிய அமைப்பாளர் அண்ணா அப்பாசாமி,  ஒன்றிய மாணவர் அணி தலைவர் திலக், காவேரிப்பட்டணம் மாணவர் கழகப் பொறுப்பாளர் கலையரசி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு அனைவரும் வீரவணக்க  முழக்கமிட்டனர்.

கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் கி.வேலன் அனை வருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment