பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு 'சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது' கல்லூரி தலைவர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு 'சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது' கல்லூரி தலைவர் பாராட்டு

பெரியார் நூற்றாண்டு  பாலிடெக்னிக்  கல்லூரி, சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருதைப் பெற்றுள்ளது. வல்லம், பெரியார் நூற்றாண்டு  பாலிடெக்னிக்  கல்லூரியில் இயங்கி வரும் இந்திய பொறியாளர் கூட்டமைப்பு [Institution of Engineers (India)]  வாயிலாக மாணவ, மாணவிகள் கட்டுரை தயாரித்தல், தொழில்நுட்ப  திட்டத்திற்கான போட்டிகளில் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றின்   மூலம் தங்களின் தொழில்நுட்ப அறிவையும் திறனையும் வளர்த்துக் கொள்வதோடு  தங்கள் வேலைவாய்ப்பையும் உறுதி செய்து கொள்கின்றார்கள். இந்திய பொறியாளர் கூட்டமைப்புடன் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து முதல்,இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளை அளித்து சிறப்பாக செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.  இந்த ஆண்டு 2021-2022ஆம் ஆண்டிற்கான சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருதை 16.12.2022 அன்று சென்னையில் நடைபெற்ற 37ஆவது இந்திய பொறியியல் மகாசபை கூட்டத்தில் வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் வென்று விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது. விருதினை பெற்ற கல்லூரி முதல்வர்  மல்லிகா மற்றும் பேராசிரியர்களை கல்லூரி தலைவர் கி. வீரமணி அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார். (தஞ்சாவூர் - 19.12.2022)


No comments:

Post a Comment