டெல்டாவில் 5.36 லட்சம் ஏக்கர் சாகுபடி சாதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

டெல்டாவில் 5.36 லட்சம் ஏக்கர் சாகுபடி சாதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெருமிதம்

தஞ்சாவூர்,டிச.16-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் காரீப் பரு வம் 2022- 2024 சம்பா நெல் கொள்முதல் தொடர்பான முத் தரப்பு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று (15.12.2022) நடை பெற்றது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி. கல்யாணசுந்தரம், புதுடில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் பங்கேற்றனர். 

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளின் நலனுக்காக ரூ.51 கோடி நிதி வழங்கியதன் காரணமாக, 5.36 லட்சம் ஏக்கர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சாதனை அடைந்தது ஒரு மைல் கல். கடந்தாண்டு 4 மாவட்டங்களிலிருந்தும் சம்பா பருவத்தில் 10.3 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஆண்டில் 10.6 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மேற்கண்ட 4 மாவட்டங்களிலிருந்தும் சம்பா பருவத்தில் 22.30 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஆண்டில் 23.73 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி எதிர் பார்க்கப்படுகிறது என்றார்.


No comments:

Post a Comment