அலைபேசி செயலி மூலம் பண மோசடி; ரூ.51 கோடி நிதி முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

அலைபேசி செயலி மூலம் பண மோசடி; ரூ.51 கோடி நிதி முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடில்லி டிச. 15, அலைபேசி செயலி மூலம் பண மோசடி காரணாமாக ரூ.51 கோடி நிதியை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'எம்பிஎப்' என்ற அலைபேசி செயலிக்கு பின்ன ணியில் செயல்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது மேகாலயா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த செயலியில் முதலீடு செய்தால், அதிக வருவாய் கிடைக்கும் என்று ஆசைகாட்டி, மோசடி கும்பல் ஏராளமானோரை ஈர்த்தது. பின் னர், செயலியை செயலிழக்கச் செய்து விட்டு, கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் தப்பி விட்டது. இதில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில், நொய்டா, புனே, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இதைத்தொடர்ந்து, 'எம்பிஎப்' செயலியுடன் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.51 கோடியே 11 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.


No comments:

Post a Comment